
வேலை கொஞ்சம் அதிகமா இருந்ததால இந்த பதிவு போட்டதும் என்னால உடனே பதிவு போடமுடியல.(டேய் அப்போ மத்தவங்க எல்லாம் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு பதிவு போடறாங்களான்னு கேட்ராதிங்க)
சரி விஷயத்துக்கு வருவோம், அதாகப்பட்டது திருநெல்வேலின்னா அல்வா, மதுரைனா மல்லி, மனப்பாறைனா முறுக்கு, திருச்சின்னா மலைக்கோட்டை.(எப்புடி நம்ம இன்ட்ரோ)
இப்போ என்னப்பத்தி, திருச்சியில அண்ணாநகர்ன்னு ஒரு பகுதியில்தான் நான் இருந்தேன். திருச்சிலருந்து புதுக்கோட்டை போற வழில ஏர்போர்ட், MIET, அதுக்கப்பறம் வர மாத்தூர் ரௌண்டான'ல ஒரு லெப்ட் கட் (அடடா!! என்ன ஒரு டமில் பற்று) அடிச்சீங்கன்னா அண்ணாநகர் மெயின் ரோடு வரும். (ஒரு ஆர்ச் இருக்கும்) அடுத்தது அயன்புத்தூர்னு ஒரு கிராமம் நெக்ஸ்ட் கும்பக்குடின்ற கிராமம் அதுக்கப்றம் ஒரு லெப்ட் கட் பண்ணுனாதான் நான் சொல்ற அண்ணா நகர் இருக்கு. கட் பண்ணாம போனா OFT அதாவது துப்பாக்கித் தொழிற்சாலைங்கர ஏரியாவுக்கு போகலாம். திருச்சி மத்தியப்பேருந்து நிலையத்துலருந்து (எந்த ஊர்லருந்து வந்தாலும் இங்கதான் எறக்கி விடுவாங்க, சென்னை கோயம்பேடு மாதிரி) அதாவது ஜங்ஷன்லருந்து 15 கி.மி தூரத்துலதான் இந்த இடம் இருக்கு. அதிகமா மத்திய தர மக்கள் அதிகமா வசிக்கற இடம் இது. நல்ல இடம் ஆனா நான் சொல்லப்போறது நான் அதிகமா திருச்சில சுத்துன இடங்கள், எனக்கு பிடித்த இடங்கள் அங்க கெடச்ச சில அனுபவங்கள் எல்லாம் சொல்லப்போறேன். (தைரியம் இருக்கறவங்க தொடரலாம்) ரெடி ஸ்டார்ட் :)

திருச்சியில கோவில்கள்னு சொல்லப்போனா மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், வயலூர் இந்த கோவில்கள் எல்லாம் பிரபலமான கோவில்கள் எனக்கு தெரிஞ்சவரைக்கும். விடுமுறை நாட்கள்ல இல்லைனா நண்பர்களோட சின்னதா ஒரு டூர் போகணும்னா முக்கொம்பு (திருச்சிலருந்து கரூர் போற வழில இருக்கு), கொள்ளிடம், கல்லணைன்னு போகலாம். அப்டியும் பொழுது போகலையா திருச்சிலருந்து தஞ்சாவூர் மெயின் ரோட்ல ஒரு சவாரி போகலாம். (அதிகமா விபத்து நடக்கற பகுதி அது, அதனால சூதனமா போனா சந்தோஷமா திரும்பி வரலாம்).
குறிப்பிட்டு சொல்றமாதிரி திரையரங்குகள் அதிகமா இருக்குது திருச்சியில நான் அதிகமா போன மாரிஸ் காம்ப்ளெக்ஸ், அதுல அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுக்கடுத்தது காவேரி தியேட்டர் இது பலக்கரைல இருக்குது நான் அதுல பார்த்த மொத படம் துள்ளுவதோ இளமை.(தலைல துண்டு போடாத குறைதான் இந்த படம் டிக்கெட் எடுக்கறப்ப எல்லாரும்) இன்னும் கலையரங்கம், ஊர்வசி, சோனா மீனான்னு ரொம்ப தியேட்டர் இருக்கு கெயிட்டீனு ஒரு கில்மா திட்டேர் இருக்கு மார்க்கெட் பக்கத்துல, இப்பவும் அந்தமாதி படம்தான் வருதான்னு தெரியல. இதெல்லாம் திருச்சி மக்களுக்கு அதிகமா பரிட்சயமான இடங்களா இருக்கும் கண்டிப்பா.
குறிப்பிட்டு சொல்றமாதிரி திரையரங்குகள் அதிகமா இருக்குது திருச்சியில நான் அதிகமா போன மாரிஸ் காம்ப்ளெக்ஸ், அதுல அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுக்கடுத்தது காவேரி தியேட்டர் இது பலக்கரைல இருக்குது நான் அதுல பார்த்த மொத படம் துள்ளுவதோ இளமை.(தலைல துண்டு போடாத குறைதான் இந்த படம் டிக்கெட் எடுக்கறப்ப எல்லாரும்) இன்னும் கலையரங்கம், ஊர்வசி, சோனா மீனான்னு ரொம்ப தியேட்டர் இருக்கு கெயிட்டீனு ஒரு கில்மா திட்டேர் இருக்கு மார்க்கெட் பக்கத்துல, இப்பவும் அந்தமாதி படம்தான் வருதான்னு தெரியல. இதெல்லாம் திருச்சி மக்களுக்கு அதிகமா பரிட்சயமான இடங்களா இருக்கும் கண்டிப்பா.
மொதல்ல மலைக்கோட்டையிலருந்து ஆரம்பிக்கலாம். மாரிஸ் தியேட்டர் பக்கத்துல இருக்கற ஒரு காலேஜுக்கு (டுடோரியல் காலேஜ் ஹி ஹி) போறப்ப (சொல்லவே இல்ல) கட் அடிக்கற நேரமெல்லாம் (நான் இல்லைங்க வாத்தியார்) நண்பர்களோட சாய்ஸ் மலைக்கோட்டை உச்சி புள்ளையார் கோயில்தான். பக்தியெல்லாம் இல்ல பொழுது போறதுக்காக போவோம். அங்கருந்து திருச்சியோட முழு அழக ரசிக்கலாம். காவிரி ஆறு அதுக்கு மேல இருக்கற பாலங்கள், மேல இருந்தது பாக்கறப்ப அட்ட பூச்சி சைஸ்ல போகுற மாதிரி டிரைன், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் கோபுரம், பச்ச பசேல்னு இருக்கற தென்னந்தோப்புகள், வயல்கள்னு பாத்துகிட்டே இருக்கலாம், மலை மேல உள்ள கடைகள்ள கொறிக்கறதுக்கு கொஞ்சம் தீனி வாங்கிட்டு போய் உக்காந்தா பொழுது போறதே தெரியாது அப்டி இருக்கும் அந்த இடம். காதலர்கள் போனா உக்கார விடமாட்டாங்க தொரத்தி விட்டுடுவாங்க அப்போ நாங்க போறப்பல்லாம், இப்ப எப்டின்னு தெரியல. திருச்சியோட அடையாளம் இந்த மலைக்கோட்டைன்னு சொல்லலாம். மலைய சுற்றி கோட்டைகள் இருக்கறதால மலைக்கோட்டைனு பேர் வந்துச்சுனு நான் சொல்லல வரலாறு சொல்லுது :). உச்சி பிள்ளையார் கோவில் போறப்ப தாயுமானவர் சந்நிதி இருக்கு ரொம்ப சக்தி வாய்ந்த இடம்னு சொல்லுவாங்க.
தி. நகர்லருந்த்து (தில்லை நகர்) மாரிஸ் தியேட்டர் பாலம் வழியா நேரா வந்தா மலைக்கொட்டையோட வாசல் ராஜா காலத்து குகை வாசல் மாதி உங்களை வரவேற்கும். சாமி படத்துலகூட விக்ரம் பிளாஷ்பேக் சொல்றப்போ ஒருத்தர ஓட ஓட தொரத்துவாறு அது மலைக்கோட்டை தெப்பகுளம் பகுதிதான். அதுக்கு பக்கத்துல மெயின் ரோட்ல ஒரு பெரிய சர்ச் இருக்கும் அங்க போனது இல்லைனாலும் வெளிய இருந்து பாக்கறப்ப ரொம்ப கம்பீரமா அழகா இருக்கும்.
(அனுபவம் தொடரும்...)


76 comments:
அப்படியே சென்னை டு திருச்சி பஸ் காசு கொடுத்தீங்கன்னா பாத்துட்டு வந்து பின்னூட்டம் போடா வசதியா இருக்கும்
அக்கௌன்ட் நம்பர் வேணுமா?
http://shilppakumar.blogspot.com/2010/06/18_11.html
இதை பத்தியும் சொல்லுங்க
நல்லா இருக்கு நண்பா! தொடருங்கள்! :-)
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்படியே சென்னை டு திருச்சி பஸ் காசு கொடுத்தீங்கன்னா பாத்துட்டு வந்து பின்னூட்டம் போடா வசதியா இருக்கும்//
நல்லவேள நான் திருச்சியப்பத்தி சொன்னேன், இதே சொர்கத்தப்பத்தி சொல்லிருந்தா என்ன ஆகிருக்கும் :)
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அக்கௌன்ட் நம்பர் வேணுமா?//
எதுக்கு கஷ்டம் நான் செக் அனுப்பறேன் போய் பாங்க்ல குடுங்க உங்களுக்கு தேவைபடர அளவுக்கு மேலேயே கொடுப்பாங்க....எவ்ளோ குடுத்தாலும் நீங்களே வச்சுகோங்க எனக்கு ஒண்ணுமே வேண்டாம் (நான் ரொம்ப நல்லவன் :) ) ஆனா இந்த செக் யார் குடுத்தான்னு கேப்பாங்க பேர் சொல்லிடாதீங்க, அடிச்சு கேப்பாங்க அப்பாவும் சொல்லிடாதீங்க.
//ஜீ... said...
நல்லா இருக்கு நண்பா! தொடருங்கள்! :-)//
நன்றி தோழா.
நான் மதுரைக்காரன் ஆனாலும் பணிகாரணமாக அடிக்கடி திருச்சிவருவதுண்டு வருவதுண்டு .அங்கே எனக்கு நிறைய நண்பர்களும் உண்டு .அவர்கள் ஒரு முறை என்னை மலைகொட்டைக்கு அழைத்து சென்றார்கள் .சும்மா சொல்ல கூடாது வாவ் "சூப்பர் பிகுர்ஸ் "
//நா.மணிவண்ணன் said...
நான் மதுரைக்காரன் ஆனாலும் பணிகாரணமாக அடிக்கடி திருச்சிவருவதுண்டு வருவதுண்டு .அங்கே எனக்கு நிறைய நண்பர்களும் உண்டு .அவர்கள் ஒரு முறை என்னை மலைகொட்டைக்கு அழைத்து சென்றார்கள் .சும்மா சொல்ல கூடாது வாவ் "சூப்பர் பிகுர்ஸ் "//
(ஒ நீங்களுமா) போச்சு போங்க... சாமி கண்ண குத்தப்போகுது.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்படியே சென்னை டு திருச்சி பஸ் காசு கொடுத்தீங்கன்னா பாத்துட்டு வந்து பின்னூட்டம் போடா வசதியா இருக்கும்//
நல்லவேள நான் திருச்சியப்பத்தி சொன்னேன், இதே சொர்கத்தப்பத்தி சொல்லிருந்தா என்ன ஆகிருக்கும் :)//////////
அப்ப எனக்கு சிங்கையிலிருந்து திருச்சி டிக்கெட் போட்டு கொடுங்க!!
//வைகை said...
அப்ப எனக்கு சிங்கையிலிருந்து திருச்சி டிக்கெட் போட்டு கொடுங்க!!//
எல்லாம் வரிசைல வாங்க, யாருப்பா அங்க அடிச்சுகறது....எல்லாருக்கும் டிக்கெட் உண்டு...
கோயில்கள் நிறைய இருப்பதால் எனக்கு திருச்சி ரொம்ப பிடிக்கும். டவுண் பஸ் வசதியும் அட்டகாசம்..
//திருச்சியில அண்ணாநகர்ன்னு ஒரு பகுதியில்தான் நான் இருந்தேன். திருச்சிலருந்து புதுக்கோட்டை போற வழில ஏர்போர்ட், MIET, அதுக்கப்பறம் வர மாத்தூர் ரௌண்டான'ல ஒரு லெப்ட் கட் (அடடா!! என்ன ஒரு டமில் பற்று) அடிச்சீங்கன்னா அண்ணாநகர் மெயின் ரோடு வரும்//
திருச்சில இன்னொரு அண்ணா நகர் இருக்கு. உழவர் சந்தை அருகில்.
//கட் பண்ணாம போனா OFT அதாவது துப்பாக்கித் தொழிற்சாலைங்கர ஏரியாவுக்கு போகலாம்//
OFT க்கு அடுத்து இருக்குற முக்கியமான இடத்த பத்தி சொல்லாம விட்டுட்டீங்க. தமிழக மக்களுக்கே பெருமை தேடித் தந்த இடம் அது.
--
கொஞ்சம் லேட்டா வந்து மத்த கமெண்ட்ஸ் போடுறேன்.
திருச்சி பற்றிய தகவல்கள் அருமை.
//OFT க்கு அடுத்து இருக்குற முக்கியமான இடத்த பத்தி சொல்லாம விட்டுட்டீங்க. தமிழக மக்களுக்கே பெருமை தேடித் தந்த இடம் அது. //
அருள்மிகு குஷ்பாத்தம்மன் கோயிலப் பத்தி சொல்றீங்களா கும்மி? :))
//அருள்மிகு குஷ்பாத்தம்மன் கோயிலப் பத்தி சொல்றீங்களா கும்மி? :))//
ஆமா, அவ்வளவு பக்கத்துல இருந்துக்கிட்டு அதப்பத்தி சொல்லாம விட்டுருக்காரு. குஷ்பு அம்மனோட பக்தகோடிகள் எல்லாம் எவ்வளவு வருத்தப்படுவாங்க.
//அமுதா கிருஷ்ணா said...
கோயில்கள் நிறைய இருப்பதால் எனக்கு திருச்சி ரொம்ப பிடிக்கும். டவுண் பஸ் வசதியும் அட்டகாசம்..//
முக்கியமா தனியார் பேருந்து எல்லாம் டெரர் பாண்டி மாதிரி போகும் அந்த பக்கம். என் அனுபவத்துல சத்திரம் பேருந்து நிலையத்துலருந்து துப்பாக்கி தொழிற்ச்சாலை வரை போகுற SJT பஸ் அதிவேகத்துல போகும். அதுலயும் ஒரு விருமாண்டி மீச வச்ச ஓட்டுனர் இருக்கார் அவர் ஒட்டுனா இன்னும் வேகமா போகும். வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா அவர்களே.
//கும்மி said...
//திருச்சியில அண்ணாநகர்ன்னு ஒரு பகுதியில்தான் நான் இருந்தேன். திருச்சிலருந்து புதுக்கோட்டை போற வழில ஏர்போர்ட், MIET, அதுக்கப்பறம் வர மாத்தூர் ரௌண்டான'ல ஒரு லெப்ட் கட் (அடடா!! என்ன ஒரு டமில் பற்று) அடிச்சீங்கன்னா அண்ணாநகர் மெயின் ரோடு வரும்//
திருச்சில இன்னொரு அண்ணா நகர் இருக்கு. உழவர் சந்தை அருகில்.//
ஆமாங்க கும்மி தென்னூர் அண்ணா நகர்னு சொல்லுவாங்க.
//தஞ்சாவூரான் said...
திருச்சி பற்றிய தகவல்கள் அருமை.//
வருக வருக...
//கும்மி said...
ஆமா, அவ்வளவு பக்கத்துல இருந்துக்கிட்டு அதப்பத்தி சொல்லாம விட்டுருக்காரு. குஷ்பு அம்மனோட பக்தகோடிகள் எல்லாம் எவ்வளவு வருத்தப்படுவாங்க.//
நீங்க இப்ப சொல்லித்தான் தெரியும் எனக்கு, நான் திருச்சிலருந்த்து வந்து பத்து வருஷம் ஆகப்போகுது...கேள்விப்பட்ட்ருக்கேன் ஆனா இந்த ஏரியான்னு இப்பதான் தெரியுது. வாழ்க பக்த கேடிகள் சாரி பக்த கோடிகள்.
//நீங்க இப்ப சொல்லித்தான் தெரியும் எனக்கு, நான் திருச்சிலருந்த்து வந்து பத்து வருஷம் ஆகப்போகுது//
நவல்பட்டில் உள்ளது. அது கட்டப்பட்டது 90 களின் தொடக்கத்தில். கோயிலை எதிர்த்த அமைப்பு ஒன்றால், 1993 ல் அக்கோயிலின் வாசலில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 'சினிமாவால் சீரழியும் இளைஞர்கள்' என்னும் தலைப்பில் நான் பேசினேன். எங்கேர்ந்தாவது கல்லு பறந்து வருமான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் அவ்வளவு வொர்த் இல்லன்னு நெனைச்சிட்டாங்க போல. எவ்வித சேதாரமும் இல்லாமல் திரும்பி வந்தேன். :-)
//நவல்பட்டில் உள்ளது. அது கட்டப்பட்டது 90 களின் தொடக்கத்தில். கோயிலை எதிர்த்த அமைப்பு ஒன்றால், 1993 ல் அக்கோயிலின் வாசலில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 'சினிமாவால் சீரழியும் இளைஞர்கள்' என்னும் தலைப்பில் நான் பேசினேன். எங்கேர்ந்தாவது கல்லு பறந்து வருமான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் அவ்வளவு வொர்த் இல்லன்னு நெனைச்சிட்டாங்க போல. எவ்வித சேதாரமும் இல்லாமல் திரும்பி வந்தேன். :-)//
அட இவ்ளோ விஷயம் நடந்துருக்கா?! நீங்க எந்த ஏரியா ல இருந்தீங்க?
//திருநெல்வேலின்னா அல்வா, மதுரைனா மல்லி, மனப்பாறைனா முறுக்கு, திருச்சின்னா மலைக்கோட்டை.(எப்புடி நம்ம இன்ட்ரோ)//
எப்படி பாஸ் இப்படி யாருக்கே தெரியாத கருத்து ஒன்ன சொல்லி இருக்கீங்க :-)
//நீங்க எந்த ஏரியா ல இருந்தீங்க? //
மன்னார்புரம். நாங்களும் SJT வர்றவரைக்கும் நின்னு அதுலதான் மெயின்கார்ட் போவோம். அதுலயும் பாலக்கரைல அந்த வண்டி திரும்பும்போது கெளம்புற தூசி இருக்கே. :-)
//கலையரங்கம்//
இந்தத் தியேட்டரோட முக்கிய சிறப்பு சொல்லாம விட்டுட்டீங்களே!
//நண்பர்களோட சாய்ஸ் மலைக்கோட்டை உச்சி புள்ளையார் கோயில்தான்.//
கோயில் உள்ள போனா சிலு சிலுன்னு காத்து வருமே. வெளியில் இருப்பதை விட, எவ்வளவு கூட்டம் இருந்தாலும் உள்ளே குளுமையாக இருக்கும். Nancy Drew, Hardy Boys நாவல்களை எடுத்துச் சென்று கோயிலுக்கு வெளியில் அமர்ந்து படிப்பேன். பாடங்கள் படிப்பதற்கு பொன்மலை சென்று விடுவேன்.
மத்திய பேருந்து நிலையம் புகைப்படம் வேறு ஆங்கிளில் எடுத்தது இருந்தால் போடுங்கள். இந்தப் புகைப்படத்தில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி மட்டும்தான் தெரிகின்றது.
திருச்சி நல்ல இடம்.இரண்டுதடவை வந்திருக்கிறேன்.
//இரவு வானம் said...
//திருநெல்வேலின்னா அல்வா, மதுரைனா மல்லி, மனப்பாறைனா முறுக்கு, திருச்சின்னா மலைக்கோட்டை.(எப்புடி நம்ம இன்ட்ரோ)//
எப்படி பாஸ் இப்படி யாருக்கே தெரியாத கருத்து ஒன்ன சொல்லி இருக்கீங்க :-)//
ரைட்டு விடுங்க உங்களுக்கு இந்த தேர்தல்ல ஆயிரம் ரூபா அதிகமா தர சொல்றேன்.
//மன்னார்புரம். நாங்களும் SJT வர்றவரைக்கும் நின்னு அதுலதான் மெயின்கார்ட் போவோம். அதுலயும் பாலக்கரைல அந்த வண்டி திரும்பும்போது கெளம்புற தூசி இருக்கே. :-)//
SJT SJT'தான். மன்னார்புரமா நீங்க!!! என் நண்பர்கூட இப்போ கே.கே.நகர்லதான் இருக்காரு. பாலம் வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சா? நான் பஸ்ல மன்னார்புரம் தாண்டரப்ப மறக்காம பாக்கறது பஸ் ஸ்டாண்ட் பின்னாடி அழகழகா அடுக்கி வச்சுருக்கற அந்த கைவினைபொருட்களைத்தான். இப்பவும் அப்டியெல்லாம் விற்பனை செய்யறாங்களா?
//பாலம் வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சா?//
எனக்கு சொந்த ஊர் திருச்சி அல்ல. படிக்கும்போது மன்னார்புரத்தில் தங்கியிருந்தேன். இப்பொழுது சென்னையில் உள்ளேன்.
முடிந்துவிட்டன என்றுதான் நினைக்கின்றேன். கடந்த வருடம் திருச்சியைக் கடந்து சென்றபோது முடியும் தருவாயில் இருந்தன.
//மன்னார்புரமா நீங்க!!! என் நண்பர்கூட இப்போ கே.கே.நகர்லதான் இருக்காரு.//
நான் கூட கேகே நகர்தான் :)
//நான் கூட கேகே நகர்தான் :) //
அவர் சொன்னது திருச்சி கே கே நகர். சென்னை இல்லை. :-)
//கும்மி said...
//கலையரங்கம்//
இந்தத் தியேட்டரோட முக்கிய சிறப்பு சொல்லாம விட்டுட்டீங்களே!//
அதுக்கு தனி பதிவே போடலாம். திருச்சியிலேயே இல்லல்ல ஆசியாவிலேயே பெரிய்ய்ய்ய திரையரங்கம் நம்ம கலையரங்கம் தியேட்டர். ரொம்ப படம் பாத்துருக்கேன் கொஞ்ச நாள் மூடிருந்த்தாங்க இப்ப பழையபடி ஓடிட்டுருக்குனு நெனைக்கறேன். தமிழ்நாடு ஹோட்டல், கலையரங்கம், ஜென்னிஸ்னு ஆடம்பரமா அதே சமயம் அமைதியா இருக்கும் அந்த பகுதி. அதவிட ஒரு விஷயத்துல கலையரங்கத்துக்கு முன்னாடி இருக்கற ஒயின்ஸ் ஷாப்ப மறக்கவே முடியாது :)
//கும்மி said...
கோயில் உள்ள போனா சிலு சிலுன்னு காத்து வருமே. வெளியில் இருப்பதை விட, எவ்வளவு கூட்டம் இருந்தாலும் உள்ளே குளுமையாக இருக்கும். Nancy Drew, Hardy Boys நாவல்களை எடுத்துச் சென்று கோயிலுக்கு வெளியில் அமர்ந்து படிப்பேன். பாடங்கள் படிப்பதற்கு பொன்மலை சென்று விடுவேன்.//
திருச்சியோட பசுமையான நினைவுகள் எல்லாம் நினைவுல வந்துட்டேருக்கு உங்க பின்னூட்டம் பாக்கறப்ப. ரொம்ப நன்றி :)
நீங்க படிக்கறதுக்காக அங்கல்லாம் போவிங்களா! நாங்க படிச்சு முடிச்ச களைப்புல அங்க போவோம் :) போனதும் ஒரு உற்ச்சாகம் வரும் பாருங்க அத சொல்லவே முடியாது.....
//அதுக்கு தனி பதிவே போடலாம். //
கல்லூரிகள், சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்கங்கள், சிறப்பு விஷயங்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனிப் பதிவுகளாக போடுங்க.
(கலையரங்கத்துல எத்தனை படம் 100 நாட்கள் ஓடியிருக்கு?)
//கும்மி said...
மத்திய பேருந்து நிலையம் புகைப்படம் வேறு ஆங்கிளில் எடுத்தது இருந்தால் போடுங்கள். இந்தப் புகைப்படத்தில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி மட்டும்தான் தெரிகின்றது.//
நகர்வலம் - திருச்சிராப்பள்ளி பகுதியில் வரப்போற பதிவுகள் எல்லாம் திருச்சி சம்மந்தமான போட்டோக்கள்தான் இருக்கும் கண்டிப்பா அதையும் போடறேன்.
எல்லாம் சூப்பருங்கோ
படிக்க நன்றாக இருக்கிறது நல்லதொரு பதிவு...புகைபடங்கள் அருமை....ரூட் நல்லா map போடாமலேயே சொல்லி கொடுத்துடீங்க....இனி திருச்சி வந்தா நேரா மலைகோட்டை கண்ணை மூடிட்டு போய்டலாம்னு நினைக்கிறேன்.
//மாதேவி said...
திருச்சி நல்ல இடம்.இரண்டுதடவை வந்திருக்கிறேன்.//
வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி அவர்களே....
//இனி திருச்சி வந்தா நேரா மலைகோட்டை கண்ணை மூடிட்டு போய்டலாம்னு நினைக்கிறேன். //
சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி திருச்சி NSC போஸ் சாலை. அங்க போயி நின்னா போதும், கூட்டமே உங்கள நகர்த்தி கொண்டு போயி, மலைக்கோட்டை வாசல்ல நிறுத்திரும்.
//அவர் சொன்னது திருச்சி கே கே நகர். சென்னை இல்லை. :-) //
நானும் திருச்சி கேகே நகர்தான் சொன்னேன், கும்மி! அய்யர் தோட்டம் பக்கத்தில் :)
சென்னையிலும் கேகே நகர்தான். எங்கே போனாலும், கேகே விடமாட்டார் போல :)
//எங்கே போனாலும், கேகே விடமாட்டார் போல :) //
:))))))
//தஞ்சாவூரான் said...
//மன்னார்புரமா நீங்க!!! என் நண்பர்கூட இப்போ கே.கே.நகர்லதான் இருக்காரு.//
நான் கூட கேகே நகர்தான் :)//
நீங்களும் திருச்சியா?
//சௌந்தர் said...
எல்லாம் சூப்பருங்கோ//
நன்றிங்கோ :)
//கும்மி said...
//அதுக்கு தனி பதிவே போடலாம். //
கல்லூரிகள், சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்கங்கள், சிறப்பு விஷயங்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனிப் பதிவுகளாக போடுங்க.
(கலையரங்கத்துல எத்தனை படம் 100 நாட்கள் ஓடியிருக்கு?)//
நூறாவது நாள் படமெல்லாம் டைப் பண்ணுனா கை வலிதான் மிஞ்சும்.. ஆனா நான் பார்த்த கிங், அன்பே சிவம் இன்னும் சில படங்கள் எல்லாம் அந்த கணக்குலயே வரல. (பீலிங்க்ஸ் :) )
நீங்க எத்தன படம் பாத்துருப்பீங்க அங்க? உங்க திருச்சி அனுபவம் எப்படி இருந்துச்சு?
//Kousalya said...
படிக்க நன்றாக இருக்கிறது நல்லதொரு பதிவு...புகைபடங்கள் அருமை....ரூட் நல்லா map போடாமலேயே சொல்லி கொடுத்துடீங்க....இனி திருச்சி வந்தா நேரா மலைகோட்டை கண்ணை மூடிட்டு போய்டலாம்னு நினைக்கிறேன்.//
கண்டிப்பா விடுமுறை நாட்கள்ல போகலாம் திருச்சி மலைக்கோட்டைக்கு....
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அனுபவம் கண்டிப்பா கிடைக்கும்.
//நூறாவது நாள் படமெல்லாம் டைப் பண்ணுனா கை வலிதான் மிஞ்சும்..//
நான் கேட்டது கலையரங்கம் தியேட்டருல. நல்லா விசாரிச்சிப் பாருங்க எத்தனை படம் நூறு நாட்கள் ஓடினுச்சின்னு. ஆச்சர்யப்படுவீங்க.
//கும்மி said...
சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி திருச்சி NSC போஸ் சாலை. அங்க போயி நின்னா போதும், கூட்டமே உங்கள நகர்த்தி கொண்டு போயி, மலைக்கோட்டை வாசல்ல நிறுத்திரும்.//
அதுலயும் தீபாவளிக்கு முந்தின நாள் இரவு அந்த பகுதிக்கு போனா ரங்கநாதன் தெருவே தோத்துடும்.
//தஞ்சாவூரான் said...
//அவர் சொன்னது திருச்சி கே கே நகர். சென்னை இல்லை. :-) //
நானும் திருச்சி கேகே நகர்தான் சொன்னேன், கும்மி! அய்யர் தோட்டம் பக்கத்தில் :)
சென்னையிலும் கேகே நகர்தான். எங்கே போனாலும், கேகே விடமாட்டார் போல :)//
உண்மைய சொல்லுங்க நீங்க தி.மு.க-தான? (ஏதோ நம்மளால முடிஞ்சது :) )
//கும்மி said...
//நூறாவது நாள் படமெல்லாம் டைப் பண்ணுனா கை வலிதான் மிஞ்சும்..//
நான் கேட்டது கலையரங்கம் தியேட்டருல. நல்லா விசாரிச்சிப் பாருங்க எத்தனை படம் நூறு நாட்கள் ஓடினுச்சின்னு. ஆச்சர்யப்படுவீங்க.//
நானும் கலையரங்கத்ததான் சொன்னேன், பழைய காலத்துலருந்து சொல்ல ஆரம்பிச்சா அவ்ளோதான்!!! அந்த பின்னூட்டத்தையே ஒரு பதிவ போடவேண்டி வரும்.
//நானும் கலையரங்கத்ததான் சொன்னேன், பழைய காலத்துலருந்து சொல்ல ஆரம்பிச்சா அவ்ளோதான்!!! //
எனக்குத் தெரிந்து 1995 வரை ஒரு படம் கூட அங்கு நூறு நாட்கள் ஓடியது கிடையாது. அதற்குபின்பு ஒரு படம் மட்டுமே நூறு நாட்கள் ஓடியதாக நண்பர்கள் சொன்னார்கள். நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்கிறேன். (அவர் வலைச்சரத்துல பிசியா இருக்காரு. இப்ப இங்க வருவாரான்னு தெரியல)
//கும்மி said...
//நானும் கலையரங்கத்ததான் சொன்னேன், பழைய காலத்துலருந்து சொல்ல ஆரம்பிச்சா அவ்ளோதான்!!! //
எனக்குத் தெரிந்து 1995 வரை ஒரு படம் கூட அங்கு நூறு நாட்கள் ஓடியது கிடையாது. அதற்குபின்பு ஒரு படம் மட்டுமே நூறு நாட்கள் ஓடியதாக நண்பர்கள் சொன்னார்கள். நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்கிறேன். (அவர் வலைச்சரத்துல பிசியா இருக்காரு. இப்ப இங்க வருவாரான்னு தெரியல)//
நல்லா ஓடுன படம் நூறுநாள் அதிகமா ஓடுன படம்னு பிரிச்சா ரொம்ப படம் தேறும்.
பன்னிகுட்டி ராம்சாமியும் திருச்சிக்காரரா?
//நல்லா ஓடுன படம் நூறுநாள் அதிகமா ஓடுன படம்னு பிரிச்சா ரொம்ப படம் தேறும்.//
தியேட்டர் மிகப்பெரிது என்பதால் 50 நாட்களுக்கு மேல் ஒரு படம் அங்கு ஓடினாலே மிகப்பெரும் வெற்றிப்படம் என்று கூறுவார்கள். 100 நாட்கள் ஓடிய படங்கள் ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும்.
//பன்னிகுட்டி ராம்சாமியும் திருச்சிக்காரரா? //
அவரும் சில வருடங்கள் திருச்சியில் இருந்துள்ளார்.
//பன்னிகுட்டி ராம்சாமியும் திருச்சிக்காரரா? //
அவரும் சில வருடங்கள் திருச்சியில் இருந்துள்ளார்.//
பின்னூட்டத்துல முதல்ல வந்த ரமேஷ் ஒரு சுட்டி குடுத்தாரு P.K. ராம்சாமி வலைபக்கத்துக்கு மாரிஸ் தியேட்டர் பத்தி போட்ருந்தாறு அப்பவே நெனச்சேன்...
ஆமா ஏன் எனக்கு தொடர்ந்தது பல்ப் கொடுத்துகிட்டே இருக்கீங்க கலையரங்கம் விஷயத்துல. (வேணாம் வலிக்குது :( )
//ஆமா ஏன் எனக்கு தொடர்ந்தது பல்ப் கொடுத்துகிட்டே இருக்கீங்க கலையரங்கம் விஷயத்துல. (வேணாம் வலிக்குது :( ) //
தகவலாகத்தான் நண்பா சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. :-)
அடுத்தடுத்த பதிவுகள்ல இன்னும் நெறைய விஷயங்கள் கொடுங்க. உங்க புகைப்படங்கள் நல்லா இருக்கு.
//கும்மி said...
//ஆமா ஏன் எனக்கு தொடர்ந்தது பல்ப் கொடுத்துகிட்டே இருக்கீங்க கலையரங்கம் விஷயத்துல. (வேணாம் வலிக்குது :( ) //
தகவலாகத்தான் நண்பா சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. :-)//
அட வழக்கமா பேசற மனசாட்சியோட குரல்தான் அது, மத்தபடி தப்பால்லாம் நீங்க எடுத்துக்க சொன்னாக்கூட எனக்கு கஷ்டம்தான் ஹி ஹி ஹி :)
good article.
Thanks Anony....
am awiting for more info about trichy. Trichy le gilma theatrnalle athu Kani than...
//Udhaya said...
am awiting for more info about trichy. Trichy le gilma theatrnalle athu Kani than...//
கண்டிப்பா இன்னும் பதிவுகள் திருச்சியைப் பற்றி நம்ம நகர்வலத்துல வரும்...
திருச்சியில கில்மா தியேட்டர் பத்தி தெரிஞ்சுக்கணும்னா நம்ம P.K. ராம்சாமி பதிவுல பாருங்க. http://shilppakumar.blogspot.com/2010/06/18_11.html
திருச்சி அடிக்கடி நான் வரும் இடம்தான்.....
ஆனாலும் உங்கள் பார்வையில் திருச்சி புதிதாக படுகிறது.....சூப்பர்....
//NKS.ஹாஜா மைதீன் said...
திருச்சி அடிக்கடி நான் வரும் இடம்தான்.....
ஆனாலும் உங்கள் பார்வையில் திருச்சி புதிதாக படுகிறது.....சூப்பர்....//
நன்றி ஹாஜா மைதீன்...
ஐய்யப்பன் கோவிலை மறந்து விடாதீர்கள். ஒரு கோவில் எப்படி இருக்க வேண்டும் என்று இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். நானும் திருச்சியில் வேலை பார்த்து இருக்கிறேன். தினமும் ஒரு கோவில் செல்வோம்.
அப்பாடா ஒரு வழியா படம் ரிலீஸ் ஆகிடுச்சி போல..
படமெல்லாம் ஹெலிகாப்டர்ல பறந்து பறந்து எடுத்தீகளோ..?
//Rajan said...
ஐய்யப்பன் கோவிலை மறந்து விடாதீர்கள். ஒரு கோவில் எப்படி இருக்க வேண்டும் என்று இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். நானும் திருச்சியில் வேலை பார்த்து இருக்கிறேன். தினமும் ஒரு கோவில் செல்வோம்.//
திருச்சின்னு சொன்னதுமே அங்க உள்ள கோவில்கள்தான் எல்லோர் நினைவுக்கு வரும், உங்களுக்கும் பல அனுபவங்கள் கிடைத்திருக்குமே திருச்சியில்!?
//ஹரிஸ் said...
அப்பாடா ஒரு வழியா படம் ரிலீஸ் ஆகிடுச்சி போல..//
மாப்பு நீ ரொம்ப லேட்...வர வர பன்ச்வாலிடியே இல்ல உன்கிட்ட...சொல்லிப்புட்டேன் ஆமா...
நல்ல இருக்கு உங்களோட பதிவுகள்
//ஹரிஸ் said...
படமெல்லாம் ஹெலிகாப்டர்ல பறந்து பறந்து எடுத்தீகளோ..?//
வாடகை ஜாஸ்தி மாப்ள அதனால நம்ம ஸ்பைடர்மேன் முதுகுல உக்காந்து எடுத்தது எல்லாம். பயபுள்ள வாடகைகூட வேணாம்னு சொல்லிட்டான்னா பாத்துக்க :)
//அரசன் said...
நல்ல இருக்கு உங்களோட பதிவுகள்//
நன்றி அரசன் அவர்களே...
நான் திருச்சியில் 1989 தொடக்கம் 1999 வரை படித்தேன். தற்போது வவுனியாவில் ஆசிரியராக உள்ளேன். தங்களின் பதிவு பல ஞாபகங்களை என் முன் கொண்டு வந்தது அதற்கு நன்றி.
//ச.இலங்கேஸ்வரன் said...
நான் திருச்சியில் 1989 தொடக்கம் 1999 வரை படித்தேன். தற்போது வவுனியாவில் ஆசிரியராக உள்ளேன். தங்களின் பதிவு பல ஞாபகங்களை என் முன் கொண்டு வந்தது அதற்கு நன்றி.//
மிக்க மகிழ்ச்சி...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி....
I AM LIVING IN TRICHY
//ADAM said...
I AM LIVING IN TRICHY//
Oh dats gr8, we people all missing trichy life...
thanks for coming.....
very gooood marai usa
//Anonymous said...
very gooood marai usa//
thank you....
Nice
Post a Comment