தெரிஞ்சது, தெரியாதது, உட்டாலங்கடி, தத்துவம், நகைச்சுவை, படிச்சதில் பிடிச்சது (யாரது அங்க? செல்லாது செல்லாதுன்னு சொல்றது), எங்க தெருவுல நடந்தது அப்டி இப்டின்னு எல்லா விஷயமும் மொத்தமா ஒரு பதிவுல போடறதுதான் (நீயுமா!!) "காக்டெயில்". சரி வாங்க கண்டினியூ பன்னலாம். (பார்ரா)
ரொம்பநாள் கழிச்சு நாளைக்கு (10-12-2010) சென்னைல கிரிக்கெட் போட்டி நடக்கப்போகுது! இந்திய அணி ரன் மழை குவிக்கப்போகுதா இல்ல வானத்துலருந்து மழை கொட்டப்போகுதாணு தெரியல. ஆல் தி பெஸ்ட் இந்தியா! (நான் சொல்லி கொடுத்த மாதிரியே விளையாடுங்க கண்டிப்பா வெற்றி நமக்குதான் :) )
நம்ம நகர்வலம் தொடர்ல திருச்சிராப்பள்ளி பற்றிய தொடர்ல நான் எதிர்பாக்காத அளவுக்கு பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களை மின் அஞ்சல் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் தெரிவிச்ச வண்ணம் இருக்காங்க. அவங்க அனைவருக்கும் நன்றிகள்.
நம்ம கடைக்கு புதுசா ஒரு மென்பொருள் இன்ஸ்டால் பண்ணிருக்கேன், சும்மா சொல்லகூடாது உக்காந்த எடத்துலருந்தே எல்லா கணினியையும் கவனிச்சுக்கலாம். ஆள் இல்லாதப்ப உக்காந்த எடத்துலருந்தே மட்டற்ற கணினிகளை ஆப் பண்ணிக்கலாம், ரீஸ்டார்ட் பண்ணிக்கலாம், வாடிக்கையாளரோட விபரங்கள் மற்றும் உபயோகபடுத்துன கட்டணம் எவ்ளோன்னு துல்லியமா தெரிஞ்சுக்கலாம். கண்டிப்பா கணினி மையம் வச்சுருக்கரவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் இந்த மென்பொருள். க்ளின்க் (Clinck) அந்த மென்பொருளோட பெயர். இணைய மையம் வச்சுருக்கற நண்பர்களுக்கு விருப்பட்டா சொல்லுங்க தொடர்புகொள்ளும் முகவரி சொல்றேன்....முப்பது நாட்கள் முன்னோட்டமாக முயற்சி செய்யலாம். பிறகு அதற்குரியவர்களிடம் கூறினால் இலவசமாகவே அந்த மென்பொருளை உங்கள் அலுவலகத்திற்க்கே வந்து இன்ஸ்டால் செய்து கொடுப்பார்கள். வேறு ஏதும் சந்தேகம் என்றால் பின்னூட்டம் மூலமாக கேட்கலாம்.
இந்த வார குறுஞ்செய்தி:
இந்த வார சினி நியூஸ்:
இளைய தளபதி விஜய் இயக்குனர் சங்கர் இயக்கப்போற 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்ல நடிக்கப்போரதில்லைன்னும், அந்த படத்திலிருந்து விலகப்போவதாகவும் தகவல், சங்கர் எதிர்பார்க்கிற விஷயங்கள்ல விஜய்க்கு கருத்துவேறுபாடு உள்ள காரணத்தினால் இந்த முடிவாம். (அப்போ வட போகபோகுதா)
இந்த வார வீடியோ:
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில ஒரு சின்ன பொண்ணு பாடுன பாட்டு, கேட்டு பாருங்க அசந்துருவிங்க.
இந்த வார இணையதள முகவரி:
நம்ம புகைப்படத்த விதவிதமான இடத்துல அழகா பாக்கறதுன்ன யாருக்குதான் புடிக்காது அந்த மாதிரி நம்ம புகைப்படத்த குடுத்தா விதவிதமா மாற்றி தருகிற ஒரு தளம்தான் இந்த போட்டோ-புனியா (photofunia) தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நெனைக்கறேன். சுட்டி இங்கே (உதாரணத்துக்கு கீழே உள்ள படம்)அன்புடன்
தலதளபதி....


31 comments:
Thankyou for photofunia
வட போச்சே..
போட்டோ-புனியா..அறிமுகத்துக்கு நன்றி..
அடப்பாவிகளா.... காக்டெயில் என்ற பெயரில் பல்சுவை பதிவுகள் எழுத வேண்டுமென நீண்ட நாட்களாக திட்டம் வைத்திருந்தேன்... இப்போ நான் எங்கே போவேன் எனக்கு யாரைத்தெரியும்...
ம்ம்ம்.... அப்போ அந்த புகைப்படத்துல இருக்குறது நீங்கதானா...
குறுஞ்செய்தியை வெறும் வார்த்தைகளாக எழுதி இருந்தால் சுவாரஸ்யம் குறைந்திருக்கும்... நீங்கள் அதை அருமையாக செய்திருக்கிறீர்கள்...
//ஐத்ருஸ் said...
Thankyou for photofunia//
நன்றி மீண்டும் வருக :)
உங்கள் நகர்வலம் எப்போது?
//ஹரிஸ் said...
வட போச்சே..//
மொதல்ல வந்தா சூடான வட ரெண்டாவது வந்தா ஆறிப்போன வட அவ்ளோதான்....
//ஹரிஸ் said...
போட்டோ-புனியா..அறிமுகத்துக்கு நன்றி..//
அட ஏன் இப்டி? நல்லாத்தான இருந்த!!
//philosophy prabhakaran said...
குறுஞ்செய்தியை வெறும் வார்த்தைகளாக எழுதி இருந்தால் சுவாரஸ்யம் குறைந்திருக்கும்... நீங்கள் அதை அருமையாக செய்திருக்கிறீர்கள்...//
மிக்க நன்றி.
//philosophy prabhakaran said...
அடப்பாவிகளா.... காக்டெயில் என்ற பெயரில் பல்சுவை பதிவுகள் எழுத வேண்டுமென நீண்ட நாட்களாக திட்டம் வைத்திருந்தேன்... இப்போ நான் எங்கே போவேன் எனக்கு யாரைத்தெரியும்...//
கவலைய விடுங்க, உம்னு ஒரு வார்த்த சொல்லுங்க "தேவை ஒரு தல்லைப்பு பிலாசபிக்குனு" ஒரு பதிவு போட்ரலாம். அப்புறம் என்ன கொட்டோ கொட்டுன்னு கொட்டும் தலைப்பு.
//philosophy prabhakaran said...
ம்ம்ம்.... அப்போ அந்த புகைப்படத்துல இருக்குறது நீங்கதானா...//
நானேதான், வேற யாரோட படமாவது போட்டா கேசு குடுத்துடுவாங்கள்ள. எப்புடி என்னோட ராச தந்திரம் :)
//NKS.ஹாஜா மைதீன் said...
உங்கள் நகர்வலம் எப்போது?//
இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த நகர்வலம் தயாராகிவிடும் நண்பரே...
விளிப்பிற்கு நன்றி.
நல்ல தகவல்களுக்கு நன்றி தல!
//வைகை said...
நல்ல தகவல்களுக்கு நன்றி தல!//
வருகைக்கு நன்றி வைகை அவர்களே...
nice! :-)
//ஜீ... said...
nice! :-)//
வாங்க ஜீ, நாலு வார்த்தைல கூலா பின்னோட்டம் போடறது நீங்க ஒருத்தர்தான் ஜீ.. y late 2day? :)
ப்ளாக் மேல தல தளபதி அப்டின்னு இருக்கு .
கீழ
அன்புடன்
தளதளபதி....அப்டின்னு இருக்கு தல யா தள யா- விளக்கவும்
//ண்டிப்பா கணினி மையம் வச்சுருக்கரவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் இந்த மென்பொருள். க்ளின்க் (Clinck) அந்த மென்பொருளோட பெயர். இணைய மையம் வச்சுருக்கற நண்பர்களுக்கு விருப்பட்டா சொல்லுங்க தொடர்புகொள்ளும் முகவரி சொல்றேன்....//
Please தகவல் கொடுங்களேன். மெயில் id sgramesh1980@gmail.com
//சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில ஒரு சின்ன பொண்ணு பாடுன பாட்டு, கேட்டு பாருங்க அசந்துருவிங்க.///
Excellent
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ப்ளாக் மேல தல தளபதி அப்டின்னு இருக்கு .
கீழ
அன்புடன்
தளதளபதி....அப்டின்னு இருக்கு தல யா தள யா- விளக்கவும்//
:( மாத்திடறேன் மாத்திடறேன்...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில ஒரு சின்ன பொண்ணு பாடுன பாட்டு, கேட்டு பாருங்க அசந்துருவிங்க.///
Excellent//
ஆமாங்க!!! என்னமா பாடுது அந்த பொண்ணு!!!! நான் கொஞ்சம் ட்ரை பண்ணுனாலே இன்னைக்கு அம்மாவாசை இல்ல ஏன் காக்காவ கூப்டுறனு சொல்றாங்க... என்ன கொடும ரமேஷ் இது.
ரமேஷ் நீங்க எந்த ஊர்ல கட போட்ருகீங்கனு சொன்னா அந்த ஊர்ல இருக்கறவங்க முகவரி சொல்ல வசதியா இருக்கும்.
Chennai
அப்போ நீங்களும் நம்ம லைன்தானா ரமேஷ்?
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Chennai//
முகவரி அனுப்பிருக்கேன்...உங்க மின்னஞ்சல் பொட்டிய தொறந்து பாருங்க பாஸ்..
போட்டோ-புனியா..அறிமுகத்துக்கு நன்றி..
விஜய் மேட்டர் சூப்பர்
//"ராஜா" said...
விஜய் மேட்டர் சூப்பர்//
நன்றி ராஜா...
//Anonymous said...
போட்டோ-புனியா..அறிமுகத்துக்கு நன்றி.//
நன்றி அனானி நண்பரே...
Post a Comment