அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லாரும் ஒரு வலைப்பூ வச்சுருக்கறத பாத்துட்டு நாபாட்டுக்கு தல தளபதின்னு ஒரு வலைபூ ஆரம்பிச்சுட்டேனே தவிர இதுல என்ன பதிவு போடறது, எதப்பத்தி போடறதுன்னு ஒண்ணுமே புரியலை. (ஆழம் தெரியாம கால.. இல்லங்க உள்ளயே விழுந்துட்டேன்).சினிமா விமர்சனம் அப்றம் ஊருக்குள்ள நடக்கறதெல்லாம் பிட்டு பிட்டா செய்தி மாதிரி போடலாம்னா நம்ம ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், கருந்தேள் கண்ணாயிரம்னு ரொம்பபேர் இருக்காங்க, சரி அவங்க பொழப்ப கெடுக்கவேணாம்னு விட்டுட்டேன் (நோ நோ நோ சட்டத்த உங்க கையில எடுத்துக்கறது தப்பு மொதல்ல நீங்க எடுத்த கட்ட, கம்பி, கடப்பாறை எல்லாம் கீழ போடுங்க), இந்த வெளிநாடு, எரோப்பிளேனு, பாஸ்போர்ட்னு எதாச்சு பூச்சி காட்டலாம்னு பாத்தாக்கூட நம்ம KRP செந்தில் அதுல புதுசு புதுசா கதையெல்லாம் சொல்லி பூந்து விளையாடுறாரு (ம்க்கும் இல்லன்னாமட்டும்).
புரட்சி, யூனியன், செவப்பு கொடின்னு எதாச்சு சுயமா சிந்திச்சு (நம்பமாட்டிங்களே) பதிவு போடலாம்னு பாத்தா அதுக்காகவே பொறந்து வளந்தவங்க எல்லாம் வினவு தளத்துல பதிவு போட்டுட்ருக்காங்க. (உனக்கெதுக்குடா ஊர் வம்பு?! சொன்னா கேளு உன்னால அடி தாங்கமுடியாது).
கடைசியா என்னதான் நீ சொல்லவர்றனு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது, ஆனா நீங்கதான் அதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லணும், எந்தமாதிரி பதிவு போட்டா நீங்க எல்லாம் என் சலூனுக்கு வருவீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க. சத்தியமா சொல்றேன் உங்களல்லாம் எப்டி என் சலூனுக்கு வரவைக்கரதுன்னே தெரியல, நா என்ன வச்சுகிட்டா வஞ்ஜனை பண்றேன்?!!!! முடிய்ய்ய்ய்யல.... புரிஞ்சுக்கோங்க.
(பின்குறிப்பு: இந்த பதிவை படித்துவிட்டு உங்க ரியாக்க்ஷன் இப்டி இருந்தா நா பொறுப்பில்ல இப்பவே சொல்லிட்டேன்).
(பின்குறிப்பு: இந்த பதிவை படித்துவிட்டு உங்க ரியாக்க்ஷன் இப்டி இருந்தா நா பொறுப்பில்ல இப்பவே சொல்லிட்டேன்).

16 comments:
நல்லாத்தானே இருந்தீஙக.
//இனியவன் said...
நல்லாத்தானே இருந்தீஙக.//
ஏன் பாஸ் எனி ப்ராப்ளம்?
அட வலையுலகில் புதுசா ஒரு தல, வாங்க, கலக்குங்க!
ஆஹா... தம்பி, இது புதுவிதமா இருக்கே.. தொடர்ந்து கலக்குங்க...
என் அன்பும், வாழ்த்துக்களும்...
என்னத்த சொல்ல.....
//வெங்கட் நாகராஜ் said...
அட வலையுலகில் புதுசா ஒரு தல, வாங்க, கலக்குங்க!//
மிக்க நன்றி வெங்கட் அவர்களே..
//கே.ஆர்.பி.செந்தில் said...
ஆஹா... தம்பி, இது புதுவிதமா இருக்கே.. தொடர்ந்து கலக்குங்க...
என் அன்பும், வாழ்த்துக்களும்...//
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா.
//ரஹீம் கஸாலி said...
என்னத்த சொல்ல.....//
சும்மா எதாச்சு சொல்லிட்டு போங்க பாஸ் காசா பணமா.
புது வரவு... தல தளபதி வாழ்த்துக்கள்
//புது வரவு... தல தளபதி வாழ்த்துக்கள்//
நன்றி திரு. சரவணன் அவர்களே.
இதுக்கே உக்காந்து யோசிக்கணும் தல..கலக்குங்க...
வாங்க. நீங்க என்னா சொன்னாலும் நாங்க தலய ஆட்டறோம்.
தலதளபதி வளரவாழ்த்துக்கள்..
//ஹரிஸ் said...
இதுக்கே உக்காந்து யோசிக்கணும் தல..கலக்குங்க...//
ரூம் போட்டுக்கூட யோசிக்கலாம் தப்பில்ல :)
//ரேகா ராகவன் said...
வாங்க. நீங்க என்னா சொன்னாலும் நாங்க தலய ஆட்டறோம்.//
ரைட்டு விடுங்க...
//ஜாக்கி சேகர் said...
தலதளபதி வளரவாழ்த்துக்கள்...//
மிக்க நன்றி ஜாக்கி சேகர் அவர்களே...
Post a Comment