Tuesday, November 30, 2010

கனிமொழி - சூடான விமர்சனம்

கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகள் ஆவார். இவரது அண்ணன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது. (மொரைக்கக்கூடாது முழுசா படிங்க)

மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார்.1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய, ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். ஒரு மகன்; பெயர் ஆதித்யா.

சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.

தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
மனசாட்சி: அப்போ நீ கனிமொழி படத்தபத்தி விமர்சனம் போடல? male16 smiley, male smiley, mad smiley, angry smiley
தளதளபதி: அதுக்குத்தான் அந்த பதிவோட ஆரம்பத்துல படத்தோட படம் போட்ருக்கேன்ல.
மனசாட்சி: அப்புறம் ஏன் சூடான, ஆறிப்போனனு தலைப்பு போட்ட?
தளதளபதி: அதான் நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல நாதாரித்தனம் பண்ணுனாலும் அத............
மனசாட்சி: டாய்ய்ய்ய்...
தளதளபதி: எஸ்கேப்புடா மச்ச்சி...

13 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super review hehe

தல தளபதி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
super review hehe//

ரமேஷ் சத்தியமா நீங்க நல்லவருதாங்க :)

எஸ்.கே said...

நல்லா இருக்குங்க விமர்சனம்!
அப்படியே சூரியன், அம்மா, ஐயா, இதுக்கெல்லாம் விமர்சனம் போடுங்க! (அட நான் படம் பேரத்தான் சொன்னேன்!)

தல தளபதி said...

//எஸ்.கே said...
நல்லா இருக்குங்க விமர்சனம்!
அப்படியே சூரியன், அம்மா, ஐயா, இதுக்கெல்லாம் விமர்சனம் போடுங்க! (அட நான் படம் பேரத்தான் சொன்னேன்!)//

உங்க பிளான் என்னனு தெரிஞ்சுடுச்சு :)

ஜீ... said...

சூப்பரப்பு! :)

தல தளபதி said...

//ஜீ... said...
சூப்பரப்பு! :)//

வாங்க ஜீ...

ஹரிஸ் said...

தளதளபதி: எஸ்கேப்புடா மச்ச்சி...//

பயபுள்ள எஸ்கேப் ஆய்டுச்சி.,,நீ மட்டும் கைல கிடைச்ச..

philosophy prabhakaran said...

Good Creativity... படத்துக்கு ஹீரோ ராசா தானே...

தல தளபதி said...

//ஹரிஸ் said...
தளதளபதி: எஸ்கேப்புடா மச்ச்சி...//

பயபுள்ள எஸ்கேப் ஆய்டுச்சி.,,நீ மட்டும் கைல கிடைச்ச..//

வெள்ள கோடி..வெள்ள கோடி...

தல தளபதி said...

//philosophy prabhakaran said...
Good Creativity... படத்துக்கு ஹீரோ ராசா தானே...//

பிலாசபிக்கு எப்பவுமே குசும்புதான் :)

Jana said...

திரைப்படம் பற்றி சொல்லுவீர்களோ என்று பார்த்தால் கலைஞரின் படைப்பு ஒன்றைப்பற்றி சிலாகித்து உள்ளீர்கள். என்றாலும் நல்லாத்தான் உள்ளது.

தல தளபதி said...

//Jana said...
திரைப்படம் பற்றி சொல்லுவீர்களோ என்று பார்த்தால்//

வாங்க ஜனா...
உங்கள எமாத்துனதுல வருத்தம்தான் ஆனா நான் திரை விமர்சனம் போட்டா அதவிட நீங்க வருத்தப்படுவீங்க மக்கள் நலனுக்காக அதெல்லாம் பண்றதில்ல. வேணும்னா சொல்லுங்க எல்லாரையும் கதற கதற ஓட வச்சுடலாம் :)

தல தளபதி said...

//கலைஞரின் படைப்பு ஒன்றைப்பற்றி சிலாகித்து உள்ளீர்கள். என்றாலும் நல்லாத்தான் உள்ளது.//

இதுக்கு பேர்தான் சிலாகித்தலா!! நன்றி.

Post a Comment