Wednesday, November 24, 2010

உருப்படுமா தமிழக காவல் துறை?

கொஞ்சநாளுக்கு முன்னாடி ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் வைகைப்புயல் வடிவேல் நடிச்ச மருதமலை படம் பாத்தேன், அதுல நம்ம எல்லாரையும் விலா வெடிக்க சிரிக்க வச்சதுல வடிவேல் நடிச்ச அந்த சிரிப்பு போலீஸ் கேரக்டர் ரொம்ப பிரபலம். அதுலயும் கடைக்காரர்கிட்ட மாமூல் வாங்கறப்ப அந்த பிச்சகாரர்கூட வர காமெடி சூப்பராருக்கும். என்னடா நம்ம ஊரு போலீச வச்சு இப்படி காமெடி பண்றாங்களேன்னு தோனுச்சு. ( திடீர்னுதான் :) ) இதுல மட்டும் இல்ல நம்ம இயக்குனர் சங்கர் அவர்கள் எடுத்த  படத்துலயும் இன்னும் சில இயக்குனர்கள் எடுத்த படத்துலயும் தப்பு பண்ற போலீஸ், தப்புக்கு உடந்தையா இருக்கற போலீஸ், லஞ்சம் வாங்கற போலீஸ்னு நடிக்க வச்சு ஹீரோவ விட்டு அடிச்சு நொறுக்குவார். நாமளும் கொய்யால என்டகூட போன வாரம் ட்ராபிக் போலீஸ் அம்பது ரூபா புடுங்கிட்டாண்டானு பொலம்பிருப்போம். (ஆனா ஏண்ணு சொல்லிருக்கமாட்டோம்) லைசென்ஸ் இல்லன்னா ஐநூறு ருபாய் அபராதம், அதுவே லஞ்சம் குடுத்தா ஐம்பது ரூபா. ஆனா கடைசில _________ பய (சென்னைல அதிகமா இப்டித்தான் கேட்ருக்கேன்) காச புடுங்கிட்டான்னு அவங்கள திட்டறது.

இந்தமாதி படத்த போலீஸ்காரங்க குடும்பத்தோட போய் பாக்கறப்ப அவங்களும் அவங்க குடும்பத்துல உள்ளவங்களும் என்ன மனநிலமைல இருப்பாங்க. சரி இப்டியெல்லாம் படத்துல எடுத்தா லஞ்சம் வாங்கறவங்க, கடமைய ஒழுங்கா செய்யாதவங்க எல்லாம் மாறிடுவாங்களா? இப்ப லஞ்சம் வாங்கறவங்க எல்லாம் வாங்கறத  நிறுத்திட்டு சட்டம் தன் கடமையைச் செய்யும்னு களத்துல எறங்கிட்டா அதுக்கப்றம் என்ன ஆகும்னு ஒரு படம் எடுத்தா மக்களோட நிலைமை என்னாகும்னு தெரிஞ்சுக்கலாம்.

சரி எப்டியோ எல்லா போலிசும் திருந்திட்டாங்க! அட!! அந்த அதிசயம் எப்டியோ நம்ம ஊர்ல நடந்துருச்சுங்க!(சும்மா கற்பனைலதான்),  அதுவும் ஆபீசுக்கு அவசரமா போறப்ப சாவகாசமா வந்து லைசென்ஸ எடுங்க, இன்சூரன்ஸ காட்டுங்க, ஏன் ஹெல்மெட் போடலன்னு கடுப்பேத்துற போக்குவரத்து காவல்துறை இனி சட்டம் தன் கடமையைச் செய்யும்னு மாறிட்டா! எப்ப்டிருக்கும்?

லைசென்ஸ் இல்லாம, இன்சூரன்ஸ்னு ரெனிவல் பண்ணாம, ஓவர் ஸ்பீட்ல போறது, ட்ரிபிள்ஸ்ல அடிக்கறது, எல்.எல்.ஆர். வச்சுகிட்டு பல வருஷம் வண்டி ஓட்டறது இப்டி பல விஷயத்துக்காக நம்ம மக்கள்கிட்ட ஐம்பது, நூறுன்னு லஞ்சம் வாங்கறதா எல்லாரும் சொல்லுவோம்.(உண்மையும் அதுதான்). சரி இப்போதான் போலீஸ் எல்லாம் திருந்திட்டாங்களே என்னாகும்?! அதுக்கப்றம் நாம எல்லாம் கேள்விப்படற நியூஸ் எப்டி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை.


  • இடப்பற்றாக்குறை காரணத்தால் தமிழகத்தில் பல அரசு கட்டிடங்களை போக்குவரத்து சட்டதிட்டங்களை மீறியவர்களின் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தப்போவதாக தமிழக அரசு அறிவிப்பு.
  • குங்குமம் இந்த வாரம்.... தமிழக போலீசா கொக்கா... மார் தட்டுகிறார் மாநகர போக்குவரத்து துறை ஆய்வாளர்.
  • ஆர்.டி.ஒ அலுவலகத்தில் தள்ளு முள்ளு, ஓட்டுனர் உரிமம் வாங்க லஞ்சம் கொடுக்க முயற்ச்சித்ததாக தமிழகம் முழுவதும் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது.
  • தமிழகத்தில் அரசுக்கு அதிகமான வருமானம் ஈட்டித்தரும் தொழில்களில்  டாஸ்மாக் இரண்டாவது இடம், முதலிடத்திற்கு முன்னேறியது காவல் துறை.
  • பணம் எண்ணும் எந்திரம் ஸ்டாக் இல்லையென தமிழகத்திற்கு மத்திய அரசு கைவிரிப்பு.
  • போக்குவரத்துத்துறையில் அபராதத்தொகை மூலம் வரும் வருமானத்தை எண்ணுவதற்கு, பணம் எண்ணுவதில் நல்ல அனுபவமிக்க ஆட்கள் தேவை.
  • ஓட்டுனர் உரிமம்பெற "எட்டு" போடுவது எப்படி?? கூறுகிறார் "ஏழு"மலை.
  • நவீனமுறையில் ஓட்டுனர் பயிற்சி மையம் தொடங்க "ரிளையன்ஸ்" திட்டம் உள்ளூர் பிரமுகர்கள் கொதிப்பு.
  • தமிழகத்தின் சாலைகள் முழுவதும் வெறிச்சோடியது.

ஒருவேள இப்டி எல்லாம் நடந்தா லஞ்சம் வாங்கறப்ப திட்டறதோட அவங்க எல்லாம் திருந்துனாதான் "உருப்படுமா காவல் துறைன்னு திட்டுவோம்". (எப்டியோ தலைப்ப கடைசில கொண்டுவந்துட்டேன்)


**இந்திய சட்டப்படி வோட்டு போடறது ஒவ்வொரு குடிமகனோட கடமையாம் அதனால மறக்காம ஒட்டு போடுங்க :) பதிவு புடிச்சுருந்தா**

14 comments:

ஹரிஸ் said...

ரைட்டு..

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல கனவுதான், ஆனா இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சாத்தியம் ஆகலாம் ..

இக்பால் செல்வன் said...

நீங்க நிஜமாவே தமிநாடு தானா தல. ஏன்னா இந்தப் புகைப்படம் தமிழ்நாடே இல்லைனு அடிச்சி சொல்லுவேன். அந்த ஆட்டோ கருப்பு வண்ணமாக இருக்கு, அதே போல போலீசு அணிந்திருக்கும் தொப்பியும் தமிழ்நாடு காவல்த்துறை இல்லை. இது மகாராஷ்ற்றால எடுக்கப்பட்ட புகைப்படம். மத்தபடி தமிழ்நாடு போலீசு லஞ்சம் வாங்காதுனு சொல்லல. ஆனா இந்தப் படம் தமிழ்நாடு இல்லைங்கறேன். தலைப்பு மாத்துங்க. தல !!!

தல தளபதி said...

//ஏன்னா இந்தப் புகைப்படம் தமிழ்நாடே இல்லைனு அடிச்சி சொல்லுவேன். //

நான் அடிக்காமலேயே சொல்றேன் அது தமிழ்நாடே இல்ல.

தல தளபதி said...

//இக்பால் செல்வன் said...
நீங்க நிஜமாவே தமிநாடு தானா தல.//

ஆமா ஆமா ஆமா :)

தல தளபதி said...

//அந்த ஆட்டோ கருப்பு வண்ணமாக இருக்கு//

என்னாது ஆட்டோவா!!!

தல தளபதி said...

//அதே போல போலீசு அணிந்திருக்கும் தொப்பியும் தமிழ்நாடு காவல்த்துறை இல்லை. இது மகாராஷ்ற்றால எடுக்கப்பட்ட புகைப்படம்.//

பாஸ் அந்த எடம் வெளிநாடு, மகாராஷ்டிரா இல்ல. அதுல இருக்கற போலீஸ் இந்தியன் போலீஸ். நான்தான் அந்த போட்டோவ எடிட் பண்ணினது...பதிவுக்கு போட்டோ போடணும்னு நான் எடிட் செஞ்சு போட்ட புகைப்படம் அது, அதப்போய் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...

தல தளபதி said...

//மத்தபடி தமிழ்நாடு போலீசு லஞ்சம் வாங்காதுனு சொல்லல.//

அட அது கெடக்குது கழுத வாங்க போய் காபி சாப்டுட்டு வரலாம்..

தல தளபதி said...

//தலைப்பு மாத்துங்க. தல !!!//

செல்லாது செல்லாது :)

இக்பால் செல்வன் said...

ஹி..ஹி..ஹி. நல்லாருக்கு பாஸ். வாங்க காப்பி சாப்பிட்டு வர்லாம்.

தல தளபதி said...

//ஹி..ஹி..ஹி. நல்லாருக்கு பாஸ்.//

:) ரொம்ப நன்றி இக்பால் செல்வன்...

தல தளபதி said...

//இக்பால் செல்வன் said...
வாங்க காப்பி சாப்பிட்டு வர்லாம்.//

அவ்ளோதான்.. இதுக்குபோயி அலட்டிக்கலாமா :)

தல தளபதி said...

//ஹரிஸ் said...
ரைட்டு..//

மாப்ள மொத வடையே உனக்குத்தானா? இப்பதான் இந்த பதிவோட பின்னூட்டம் எல்லாம் பாக்கறேன்...

தல தளபதி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
நல்ல கனவுதான், ஆனா இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சாத்தியம் ஆகலாம்.//

ஆனால் அதற்க்குண்டான முயற்ச்சிகள் எல்லாம் இனிதான் எடுக்கனும்னு நெனைக்கறேன்.

Post a Comment