நா போனமாசம் என்னோட சொந்த ஊருக்கு போயிருந்தேன் அந்த ஊர்லருந்து ஒரு 5கி.மி தூரத்துல இருக்கற சின்ன கிராமம்தான் தேரிக்குடியிருப்பு. திருச்செந்தூருலருந்து பதிமூணு கிலோமீட்டர் தூரத்துல இருக்கு அந்த கிராமம். எங்க குலதெய்வம்கூட அங்கதான் ஸ்டே பண்ணிட்டுருக்காரு :)
நல்ல அமைதியான ஊரு, அந்த ஊருக்குள்ள கருப்பசாமி, தேரிச்சாமி, கற்கோயில் அய்யனார்'னு பிரபலமான கோவில்கள் இருக்குது, அந்தந்த கோவிலுக்கு விசேஷம் வரப்போ மட்டும் ஊர் ஜகஜ்ஜோதியா இருக்கும். மத்தபடி அப்பப்ப ஈ, காக்கா எல்லாம் எட்டி பாத்துட்டு போகும். இப்போ இலவசமா டிவி பொட்டி குடுத்ததுனால அந்த ரெண்டு ஜீவனையும்கூட அடிக்கடி பாக்கமுடியறதில்ல. (இங்கமட்டும் என்ன வாழுதாம்)
அந்த ஊருக்கு பிளஸ் பாயிண்ட்டே அங்க இருக்கற தேரிக்காடுதான். நல்லா செவப்பு கலர்ல மண்ணு இருக்கும். ஒரு குட்டி பாலைவனம் மாதிரி இருக்கும் என்ன பாலைவனத்துல மரங்கள் அவ்ளோவா பாக்க முடியாது ஆனா இங்க எல்லா எடத்துலயும் பனை மரம், கொல்லாமரம்தான் (முந்திரி மரம்). யாருவேணா எப்பவேணா போய் பழங்கள பறிச்சுக்கலாம் ஆனா அதுல இருக்கற முந்திரிக்கொட்டைய அங்கேயே பிச்சு போட்டுட்டு வந்துடனும் ஏன்னா அதுக்காகத்தான் அந்த மரங்கள எல்லாம் குத்தகைக்கு எடுத்துருப்பாங்க.
அந்த ஊர்ல விசேஷம் தவிர மத்த நாட்கள்ல சின்ன பசங்களையும் பெரியவங்களையும்தான் பாக்கமுடியும் மத்தவங்க எல்லாம் தொழிலுக்காக வேற வேற ஊருங்களுக்கு போயிருப்பாங்க. எங்க ஊர் பக்கத்துல இருக்கற பசங்க பொண்ணுங்கள்ள பாதிபேர் சென்னையில அதுவும் நம்ம ரங்கநாதன் தெருவுல இருக்கற கடைகள்ல பாக்கலாம்.
இன்னொரு ஸ்பெஷல் இருக்கு இந்த ஊர்ல! தாமிரபரணி, வில்லு பட கிளைமாக்ஸ் எல்லாம் இங்க இருக்கற தேரிக்காட்டுலதான் எடுத்துருப்பாங்க. முக்கியமா டைரக்டர் ஹரி திருச்செந்தூர், தூத்துக்குடி பக்கமெல்லாம் ஷூட்டிங் எடுப்பாரு. சிங்கத்துல வர முதல் சண்டைக்காட்சிகூட தேரில எடுத்ததா சொல்றாங்க எனக்கு சரியா தெரியல.
மெஞ்ஞானபுரம், செம்பரிக்குளம், சோலை குடியிருப்பு, எள்ளுவிளை, காயாமொழி, பரமன்குறிச்சி, பூச்சிக்காடு, வள்ளிவிளை இதெல்லாம் இந்த ஊருக்கு ஒரு பத்து கிலோமீட்டருக்குள்ள இருக்கற ஊருங்க. உடன்குடி, குலசேகரன்பட்டினம், நாசரேத், இதெல்லாம் கொஞ்சம் தூரத்துல இருக்கற ஊருங்க.
இந்த ஊர்லருந்து அதாவது தேரிக்குடியிருப்புலருந்து 1.5 கிலோமீட்டர் போனா காயாமொழி வரும் அதுக்கப்றம் நேர்வழில போனா திருச்செந்தூருக்கு போகலாம். இன்னொரு வழில போனா பரமன்குறிச்சி வரும், சுத்தி இருக்கற கிராமங்களுக்கு இந்த ஊருதான் மெயின் பஜார். அங்கருந்து உடன்குடி, நாகர்கோயில், திருச்செந்தூர்க்குகூட போகலாம்.திருச்செந்தூர் பக்கம் போனா மறக்காம பாக்கவேண்டிய இடங்கள்ள இந்த தேரிக்குடியிருப்பும் ஒன்னு.
பின்குறிப்பு: முன்ன பின்ன இந்தமாதிரில்லாம் எழுதுனது இல்லை அதனால எதாச்சு குறை இருந்தா சொல்லுங்க மறுபடி இந்தமாதிரி எழுதறப்ப (என்னாது திரும்பவுமா) குறைகள கம்மி பண்ணிக்கறேன் (நீ எழுதறத கம்மி பண்ணுனாலே நல்லாருக்கும்). நன்றி.


13 comments:
தேரிக்குடியிருப்பு சரவணபவன் அண்ணாச்சியோட சொந்த ஊரா..? சுவாரஸ்யமா எழுத வருது உங்களுக்கு..
நகர்வலம் நல்லா இருக்கு த.த, வாழ்த்துக்கள்.
//கே.ஆர்.பி.செந்தில் said...
தேரிக்குடியிருப்பு சரவணபவன் அண்ணாச்சியோட சொந்த ஊரா..?//
இல்லன்னா, தேரிக்குடியிருப்புலருந்த்து பத்து கி.மி தூரத்தில இருக்கற நாலுமாவடிங்கற ஊர் பக்கத்துல இருக்கற புன்னையாடி கிராமம்தான் அண்ணாச்சியோட சொந்த ஊர். அவர் சமூக ஆட்கள்தான் ரொம்பபேர் இருக்காங்க அந்த பக்கம், அவர்தான் அந்த கோவிலுக்கு ஜெயேந்திரர கூட்டிட்டு வந்ததா சொல்லுவாங்க.
//சுவாரஸ்யமா எழுத வருது உங்களுக்கு..//
ரொம்ப நன்றிண்ணா...
//சைவகொத்துப்பரோட்டா said...
நகர்வலம் நல்லா இருக்கு த.த, வாழ்த்துக்கள்.//
ரொம்ப நன்றி. ஆமா அது என்ன பாஸ் த.த? தறுதலையா?
இண்ட்லியில் இணையவில்லையா நண்பா,
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே,
வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
"தேரிக்குடியிருப்பு" பார்த்துவிட்டேன்.
//மாணவன் said...
இண்ட்லியில் இணையவில்லையா நண்பா//
ஏற்கனவே இணைந்துவிட்டேன் நண்பா.
//மாணவன் said...
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே,
வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//
நன்றி நண்பா.
//மாதேவி said...
"தேரிக்குடியிருப்பு" பார்த்துவிட்டேன்.//
மிக்க மகிழ்ச்சி.
தளபதின்னு பேர் வச்சி உருப்படியா ரசிக்கிற மாதிரி எதுவும் பண்ணுறது நீங்க ஒருத்தர்தாணுகண்ணா... வாழ்த்துக்கள்
"ராஜா" said...
தளபதின்னு பேர் வச்சி உருப்படியா ரசிக்கிற மாதிரி எதுவும் பண்ணுறது நீங்க ஒருத்தர்தாணுகண்ணா... வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி. ஏனுங்ணா விஜய் மேல அம்ம்புட்டு பாசமா...
எங்கள் குல தெய்வம் கற்குவேல் அய்யனார். வருடா வருடம் இங்கு வருவோம். முன்பெல்லாம் கயமொழிளிருந்து சைக்கிள் எடுத்து செல்வோம். இப்போ வேனில் செல்கிறோம். இந்த தீபாவளிக்கு சென்று இருந்தோம்.
Post a Comment