சில இடங்கள மனசுல நெனச்சாலே இனிமையான நினைவுகள் வரும். அந்தமாதிரித்தான் எனக்கு மடிப்பாக்கம். அந்த பகுதில ஒரு அஞ்சு வருஷம் இருந்துருக்கேன், அந்த தைரியத்துலதான் நம்ம நகர்வலத்துல இந்த பதிவு. முந்தைய பதிவு என் சொந்த ஊர்ல இருக்கற தேரிக்குடியிருப்புங்கர ஒரு கிராமத்தப்பத்தி சொல்லிருந்தேன். இது நகர்வலத்தோட இரண்டாவது பதிவு. சரி வாங்க மெயின் மேட்டருக்கு போவோம்.
தம்பரத்துலருந்த்து 13 கி.மி, கிண்டிலருந்து 6 கி.மி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்லருந்து பதினெட்டு கி.மி தூரத்துல இருக்கற பகுதிதான் நான் சொல்ற இந்த மடிப்பாக்கம்ங்கர ஏரியா இருக்கு. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அந்த பகுதி எல்லாம் வயல்வெளியா இருந்துச்சுனு சொல்றாங்க. 1990ஆம் வருஷத்துக்கப்ரம்தான் குறிப்பிட்ட அளவு முன்னேற்றமடஞ்சுருக்கு மடிப்பாக்கம்னும் சொல்றாங்க. சென்னைல ரொம்ப வேகமா வளந்த்துகிட்டு வர ஏரியால மடிப்பாக்கமும் ஒன்னு. ஒரு பாத்திரக்கடைல வேல செய்யறதுக்காக நான் மடிப்பாக்கத்துக்கு 2004'ல, ஏன் சென்னைக்கே அப்போதான் வந்தேன். (போன புதுசல ஒரு அரை கிலோமீட்டார்குள்ளதான் லீவ் நாட்கள்ல சுத்திக்கிட்டுருப்பேன், ஏன்னா தனியா மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டருக்கு போறேன்னு சொல்லிட்டு கடைசியா பூக்கடை பஸ்டாண்ட்ல போய் எறங்கி திருதிருன்னு முழிச்ச கதையெல்லாம் உண்டு. :) )
கிண்டிலருந்த்து செயின்ட் தாமஸ் மௌன்ட் இரயிலடி, மேடவாக்கம், தாம்பரம் போற வழில இருக்கு மடிப்பாக்கம். வேளச்செரிலருந்த்து வந்தா கைவேலி(பள்ளிகரனைக்கு முன்னாடி ஸ்டாப்), ராம் நகர், பொன்னியம்மன் கோவில் வழியா வரலாம். இங்க குறிப்பிட்டு சொல்லனும்னா கோவில்களப்பத்தி சொல்லலாம். அங்க பிரபலமான ஐயப்பன் கோவில் இருக்கு, சபரிமலைக்கு போகமுடியாதவங்க இங்க வந்துகூட பதினெட்டு படில ஏறுவாங்க. ஜனவரி ஒன்னாம் தேதி அதாவது ஆங்கில புத்தாண்டுக்கு அந்த கோவில்ல அளிக்குற அன்னதானம் ரொம்ப பிரசித்தம், அதுக்காக அந்த பகுதில ஆயிரக்கணக்கானவங்க வருவாங்க. வசதி இருக்கறவங்க இல்லாதவங்க அப்டின்னு ஏற்றத்தாழ்வு இல்லாம வருவாங்க. (அந்த கோவிலுக்கு பக்கத்துலையே இருக்கற ஒரு BPO கம்பெனில வேலை செஞ்சுருக்கேன் அதனால அடிக்கடி போவேன் நண்பர்களோட) மடிப்பாக்கம் கூட் ரோடுலருந்து மேடவாக்கம் போற வழில ஆக்சிஸ் பேங்க்குக்கு அடுத்த இடது பக்கம் போனா அந்த கோவிலுக்கு போகலாம்.
அதிகமா இந்த பகுதிகள்ல இருக்கற மக்கள் எல்லாரும் அலுவலகம் இன்னும் மற்ற இடங்களுக்கு செல்ல டிரெயினதான் பயன்படுத்திக்கறாங்க, மடிப்பாக்கத்துலருந்து பஸ்லயோ இல்ல ஷேர் ஆட்டோலயோ செயின்ட் தாமஸ் மௌன்ட் இரயிலடிக்கு போய் அங்கருந்து டிரெயின்ல போவாங்க. அங்கருந்து வலது பக்கம் போனா கிண்டி, சைதாபேட், தி.நகர் வழியா கடற்கரை ஸ்டேஷன் வரைக்கும் போகலாம். இடது பக்கம் போனா பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம் வழியா தாம்பரம் வரைக்கும் போகலாம். அதிக நேர இடைவெளில காஞ்சிபுரம் போற டிரென் வரும் அதுல போனா தாம்பரம் தாண்டி இருக்கற பெருங்குளத்தூர், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர்னு இன்னும் சில இடங்களுக்கும் போகலாம்.
அடுத்தது மடிப்பாக்கத்தோட மைய்யப்பகுதியான மடிப்பாக்கம் கூட் ரோடுக்கு அடுத்ததா இருக்கற பாதாள விக்னேஸ்வரர் கோவில் ரொம்ப பிரசித்தம். அந்த பகுதிகள்ல இருக்கற இலங்கைத் தமிழர்கள்தான் அந்த கோவில் கட்டறதுக்கு உதவுனதா சொல்லுவாங்க. (யாராச்சு புதுசா கார், பைக் ஏன் குட்டி பசங்க சைக்கிள் வாங்குனாகூட அந்த கோவில்ல இருக்கற புள்ளையாருக்கு பூஜை போட்டு நாலு எலும்பிச்சம்பழத்த நசுக்காம போகவே மாட்டங்க:) ) இந்த பகுதிகள்ல இலங்கைத் தமிழர்கள் மற்ற பகுதிகளைவிட அதிகமா இருக்கறத நீங்க பாக்கலாம். (அங்க எனக்கும் சில இலங்கைத் தமிழ் நண்பர்கள் இருந்தாங்க. ஒரு இலங்கைத் தமிழர் போட்டோ ஸ்டுடியோல பகுதி நேர டிசைனிங் வேலை செய்யறப்ப கெடச்சவங்க அவங்க எல்லாம்).
மேல சொன்னமாதிரி மடிப்பாக்கத்தோட மைய்யப்பகுதி மடிப்பாக்கம் கூட் ரோடு (Junction), ரொம்ப பரபரப்பான ஏரியா கூட் ரோடு. இங்க அதிகமா தனியார் வங்கிகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபம், பல்பொருள் அங்காடிகள்னு ரொம்ப இருக்கு (நான் மொதல்ல வேலை செஞ்சதும் இந்த பகுதிலதான்). இந்த பகுதில இருக்கறவங்க சினிமா பாக்கனும்னா, செயின்ட் தாமஸ் மவுண்ட்க்கு போற வழில அந்த பாதாள விக்னேஸ்வரர் கோவிலுக்கு அடுத்த இருக்கும் குமரன் தியேட்டருக்குதான் போகணும். நான் மொதல்ல பாக்கறப்ப 15/-ரூபா டிக்கெட் பால்கனி 20/-ரூபா, இப்போ 40, 60 ன்னு ஏறிடுச்சு.அதிகபட்சமா அழகிய தமிழ் மகன் படத்துக்காக 150/- ரூபாதான் நான் கேள்விப்பட்டவரைக்கும் அதிகம் (நா சிக்கல, என் நண்பன் :) ). இந்த தியேட்டர விட்டா நங்கநல்லூர்ல இருக்கற வேலன், வெற்றிவேல் (பழைய பெயர் ரங்கா தியேட்டர்) தியேட்டருக்குத்தான் போகணும். இந்த நங்கநல்லூர் பகுதியப்பத்தி சொல்லனும்னா ரொம்ப சொல்லலாம்! அதுலயும் அங்க இருக்கற ஐயப்பன் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா கோவில் எல்லாவற்றையும்விட முப்பத்தி இரண்டு அடி ஆஞ்சநேயர் கோவில் ரொம்ப பிரபலம், அதப்பத்தி பின்னால் வரபோற பதிவுகள்ள சொல்றேன்.
நங்கநல்லூர், பழவந்தாங்கல், வானுவம்பேட்டை, ஆதம்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பள்ளிகரணை, வேளச்சேரி இதெல்லாம் மடிப்பாக்கம் சுற்றிலும் இருக்கற பகுதிகள்.
51S, B51, M52A, L52K இந்த நம்பர் உள்ள பஸ்ல போகலாம்.
(ஸ்டாப் வந்துடுச்சு எல்லாம் எறங்குங்க :) ) நன்றி.

12 comments:
நல்ல அனுபவம்...
நங்கநல்லூர் ல ஒரு பிரபலமான ஆள் இருக்காருக்கு உங்களுக்கு தெரியுமா?
//KANA VARO said...
நல்ல அனுபவம்...//
வருகைக்கு நன்றி...
//ஹரிஸ் said...
நங்கநல்லூர் ல ஒரு பிரபலமான ஆள் இருக்காருக்கு உங்களுக்கு தெரியுமா?//
இருக்க முடியாதே, நான் அங்கருந்து வந்து ரொம்ப நாளாச்சே!!! ஹி ஹி ஹி...
யாருங்க அது? ஆஞ்சநேயரா?
நங்கநல்லூர்ல இருக்கிற பிரபலமான ஆள் ஆஞ்சநேயர் ...
தலதளபதி... உங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சேன்... உங்களுடைய தலதளபதி என்ற பெயர் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது... சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் கூட உங்களைப் பற்றிய பேச்சு வந்தது... அயராமல் எழுதுங்கள்... சீக்கிரம் முன்னேறிவிடலாம்...
//philosophy prabhakaran said...
தலதளபதி... உங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சேன்... உங்களுடைய தலதளபதி என்ற பெயர் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது... சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் கூட உங்களைப் பற்றிய பேச்சு வந்தது... அயராமல் எழுதுங்கள்... சீக்கிரம் முன்னேறிவிடலாம்...//
தகவலுக்கு நன்றி...முயற்சி செய்கிறேன் நண்பா...
டொக்கு ஏரியான்னு சொல்வாங்க..மடிப்பாக்கம் சிறப்பாதான் இருக்கு.உங்க நகர்வலம் வளர்க..
//அமுதா கிருஷ்ணா said...
டொக்கு ஏரியான்னு சொல்வாங்க..மடிப்பாக்கம் சிறப்பாதான் இருக்கு.உங்க நகர்வலம் வளர்க..//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா அவர்களே...
//இருக்க முடியாதே, நான் அங்கருந்து வந்து ரொம்ப நாளாச்சே!!!//
ரொம்ப சரியான பதில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இருக்க முடியாதே, நான் அங்கருந்து வந்து ரொம்ப நாளாச்சே!!!//
ரொம்ப சரியான பதில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
வாங்க டோண்டு ராகவன் சார்...வருகைக்கு நன்றி.
Post a Comment