Monday, December 13, 2010

கூகிள் Adசென்ஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

இணையதளத்துல சம்பாதிக்கறதுக்கு ரொம்ப வழி முறைகள் இருக்கு, அதுல முக்கியமானது "விளம்பரங்கள் மூலமா சம்பாதிக்கறது". இலவசம் மற்றும் சொந்தமா இணையதளம் வச்சுருக்கறவங்க இந்த மாதிரி விளம்பரங்கள அதற்க்குன்னு இருக்கற நிருவனத்துகிட்ட வாங்கி அவங்கவங்க தளத்துல போட்டுடனும். எப்பல்லாம் அந்த விளம்பரத்துல இருக்கற சுட்டிய மத்தவங்க க்ளிக் பண்றாங்களோ அப்போல்லாம் உங்களுக்கு பணம் வரும் (ஒரு மாசம் கழிச்சு). ரொம்பபேர் நிறைய சம்பாதிக்கறாங்க.

Friday, December 10, 2010

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி ( பகுதி 2 )

சென்ற நகர்வலத்தின் கடைசி பத்தி : தி. நகர்லருந்த்து (தில்லை நகர்) மாரிஸ் தியேட்டர் பாலம் வழியா நேரா வந்தா மலைக்கொட்டையோட வாசல் ராஜா காலத்து குகை வாசல் மாதி உங்களை வரவேற்கும். சாமி படத்துலகூட விக்ரம் பிளாஷ்பேக் சொல்றப்போ ஒருத்தர ஓட ஓட தொரத்துவாறு அது மலைக்கோட்டை தெப்பகுளம் பகுதிதான். அதுக்கு பக்கத்துல மெயின் ரோட்ல ஒரு பெரிய சர்ச் இருக்கும் அங்க போனது இல்லைனாலும் வெளிய இருந்து பாக்கறப்ப ரொம்ப கம்பீரமா அழகா இருக்கும். (திரிச்சிராப்பள்ளியின் முதல் பதிவை பார்க்க விரும்புவோர்கள் இங்கே செல்லலாம்)
                                                                                                        
திருச்சிராப்பள்ளி பகுதி 2 தொடர்கிறது. 

திருச்சியில் மலைக்கோட்டைக்கு அடுத்ததாக நான் அதிகமாக போன இடம்னு சொல்லனும்னா தியேட்டர்தான். அதுல ஒண்ணுதான் இந்த மாரிஸ் தியேட்டர். நான் அதிகமா விரும்பி போறது அதுல மாரிஸ் 70mm காம்ப்ளெக்ஸ், சென்னைல இருக்கற தேவி தியேட்டர் மாதிரி இருக்கும் உள்ள. நீங்க பாத்துக்கிட்டுருக்கற படத்துல வலது பக்கமாதான் வாகனங்கள் நிறுத்துகின்ற  இடம் இருக்கும். தீபாவளி, பொங்கல் சமயத்துல படம் பார்க்க வந்தா இப்டி அமைதியா இருக்கற இடம் எங்க ஊர் தசரா விசேஷம் மாதிரி ஆகிடும். நான் இங்க அதிகமா செலவு பண்ணினது ஆளவந்தான் படத்துக்குதான். 

இந்த தியேட்டர் முன்னாடி ஒரு பாலம் இருக்கும், அதுக்கு பெயரே மாரிஸ் பாலம்னுதான் சொல்லுவாங்க. திருச்சி ஜங்ஷன்லருந்து உறையூர் மற்றும் தில்லைநகர் வழியா சத்திரம் பேருந்து நிலையத்துக்கு போகுற பஸ் எல்லாம் இந்த பாலம் வழியாதான் போகும். பாலம் ஏறி எறங்குனதும் நேரா பாத்தீங்கனா மலைக்கோட்டை வாசல் தெரியும், அதற்கடுத்து இந்த சர்ச் வழியா இடது பக்கம் நேஷனல் கல்லூரி, ஜோசப் கல்லூரி வழியா சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு போகலாம். அதுக்கு முன்னாடி வலது பக்கத்துல திரும்புனா (வாகனத்துல போகமுடியாது அது ஒன் வே, நடந்து போனா போகலாம்)  ஹோலி கிராஸ் கல்லூரி, ராஜா பார்க், ராமகிருஷ்ணா தியேட்டர், மரக்கடைன்ற பகுதிகள் எல்லாம் இருக்கும். இப்ப நான் சொன்ன ராஜா பார்க் முன்னாடி சாதாரணமா எல்லா எடத்த போல இருக்கும். இப்போ அந்த ஏரியா முழுவதும் சென்னை உயர்ந்த தெரு மாதிரி (அதாங்க ritchie street :) ) ஆகிடுச்சு. மொபைல் சிட்டின்னு ஒரு பில்டிங், அதுக்கு பக்கத்துல மொபைல் மற்றும் கணினி சம்மந்தமான பொருட்கள் எல்லாம் கிடைக்கும். சாயந்தரம் ஒரு ஆறு ஆறரை மணிக்கு மேல போனீங்கன்னா ரோடு ஓரத்துல பல நூடுல்ஸ் கடைகளாதான் இருக்கும்.
(சரி சரி வாய தொடச்சுகோங்க :) ) மாரிஸ் பாலத்துலருந்து அடுத்த வலது பக்கம் திரும்புனா இந்த பகுதிக்கெல்லாம் போகலாம். நேரா மலைக்கோட்டை வாசல் பக்கம் போய் அங்கருந்து வலது பக்கம் திரும்புனா (இந்த ரெண்டு சாலைக்கும் அதிக தூரமில்லை, வரிசையா ரெண்டு பஸ்ஸ நிக்க வச்ச எவ்ளோ தூரம் வருமோ அவ்ளோதான்) பிஷப் ஹீபர் ஹையர் செகண்டரி ஸ்கூல், சிங்காரத்தோப்பு, அடுத்ததா கெயிட்டி தியேட்டர் (திருச்சில இருந்தவங்க, இருக்கறவங்க கண்ணுமட்டும் பளிச்சுன்னு எரியுமே இப்போ :) ) அதற்கடுத்து பாஸ்போர்ட் அலுவலகம் வரும் அப்புறம் மார்கெட் தான் அந்த பகுதி முழுசா. அரிசிக்கு, எண்ணெய்க்கு, வெங்காயத்துக்கு, மற்ற மளிகை பொருட்களுக்குனு அதே பகுதியில சில சில அடி தூரத்துல கடைகள் இருக்கும். காய்கறி மார்கெட்டுக்கு காந்தி மார்கெட்தான். விடியகாலை ரெண்டு மணிலருந்து காலைல எட்டு மணி வரைக்கும் அப்டி ஒரு கூட்டம் இருக்கும் அங்க.
திருச்சியில இருக்கறப்ப எப்பவும் ஊருக்குள்ள பஸ்லதான் சுத்தறது, அப்டி சுத்தரப்ப நான் அதிகமா வேடிக்க பாக்கறது கடைகள்ள வச்சுருக்கற விளம்பர போர்டுதான். இப்போதான் எல்லாரும் ப்ளெக்ஸ் போர்டு வச்சுடறாங்க, ஆனா அந்த சமயத்துல அதிகமா பெய்ண்டிங்தான். அதுலயும் "குரு ஆர்ட்ஸ்"னு பெயர் போட்ருக்க விளம்பர போர்டு எல்லாமே அப்டியே அச்சுல வார்த்த மாதிரி தத்ரூபமா இருக்கும். திருச்சி வாசிகள் அனைவருக்கும் நல்ல பரிட்சயம் இருக்கும் அவர் ஓவியத்தோட. அவரபத்தி எதுவும் தெரியாது ஆனா அவர் வரஞ்ச ஓவியங்கள் அனைத்திற்கும் நான் ரசிகன்.

(அனுபவம் தொடரும்)

புத்தம் புதிய டிசைனில் 2011-ஆம் ஆண்டு நாள்காட்டி!

புது வருடம் வர இன்னும் சில நாட்கள்தான் இருக்கு, அதற்காக நம்ம மக்களுக்கெல்லாம் புத்தாண்டு பரிசா (இதெல்லாம் பரிசானு கேக்ககூடாது சொல்லிட்டேன்) கீழ இருக்கற காலன்டர குடுக்கலாம்னுதான் இந்த பதிவு (வேலை இல்லங்க).

புடிச்சவங்க டவுன்லோட் பண்ணி உங்க நண்பர்களுக்கு சொல்லப்போற புத்தாண்டு வாழ்த்துக்களோட இதுல ஒரு காலன்டரையும் அனுப்பி உங்க மகிழ்ச்சிய பகிர்ந்துகோங்க... நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (யாருப்பா அது? சித்திரைதான் புத்தாண்டுன்னு சொல்றது?!) கீழே உள்ள அனைத்து வடிவமும் போட்டோ-புனியா'ல எடிட் செய்ததது. இந்த பதிவில் தங்களை கவர்ந்த நாள்காட்டி எதுன்னும் பின்னூட்டத்துல சொல்லுங்க.

அன்புடன்
தலதளபதி...



Thursday, December 9, 2010

காக்டெயில் 09-Dec-2010

தெரிஞ்சது, தெரியாதது, உட்டாலங்கடி, தத்துவம், நகைச்சுவை, படிச்சதில் பிடிச்சது (யாரது அங்க? செல்லாது செல்லாதுன்னு சொல்றது), எங்க தெருவுல நடந்தது அப்டி இப்டின்னு எல்லா விஷயமும் மொத்தமா ஒரு பதிவுல போடறதுதான் (நீயுமா!!) "காக்டெயில்". சரி வாங்க கண்டினியூ பன்னலாம். (பார்ரா)


                                                                                                
ரொம்பநாள் கழிச்சு நாளைக்கு (10-12-2010) சென்னைல கிரிக்கெட் போட்டி நடக்கப்போகுது! இந்திய அணி ரன் மழை குவிக்கப்போகுதா இல்ல வானத்துலருந்து மழை கொட்டப்போகுதாணு தெரியல. ஆல் தி பெஸ்ட் இந்தியா! (நான் சொல்லி கொடுத்த மாதிரியே விளையாடுங்க கண்டிப்பா வெற்றி நமக்குதான் :) )  
                                                                                                
ம்ம நகர்வலம் தொடர்ல திருச்சிராப்பள்ளி பற்றிய தொடர்ல நான் எதிர்பாக்காத அளவுக்கு பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களை மின் அஞ்சல் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் தெரிவிச்ச வண்ணம் இருக்காங்க. அவங்க அனைவருக்கும் நன்றிகள்.
                                                                                                
ம்ம கடைக்கு புதுசா ஒரு மென்பொருள் இன்ஸ்டால் பண்ணிருக்கேன், சும்மா சொல்லகூடாது உக்காந்த எடத்துலருந்தே எல்லா கணினியையும் கவனிச்சுக்கலாம். ஆள் இல்லாதப்ப உக்காந்த எடத்துலருந்தே மட்டற்ற கணினிகளை ஆப் பண்ணிக்கலாம், ரீஸ்டார்ட் பண்ணிக்கலாம், வாடிக்கையாளரோட விபரங்கள் மற்றும் உபயோகபடுத்துன கட்டணம் எவ்ளோன்னு துல்லியமா தெரிஞ்சுக்கலாம். கண்டிப்பா கணினி மையம் வச்சுருக்கரவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் இந்த மென்பொருள். க்ளின்க் (Clinck) அந்த மென்பொருளோட பெயர். இணைய மையம் வச்சுருக்கற நண்பர்களுக்கு விருப்பட்டா சொல்லுங்க தொடர்புகொள்ளும் முகவரி சொல்றேன்....முப்பது நாட்கள் முன்னோட்டமாக முயற்சி செய்யலாம். பிறகு அதற்குரியவர்களிடம் கூறினால் இலவசமாகவே அந்த மென்பொருளை உங்கள் அலுவலகத்திற்க்கே வந்து இன்ஸ்டால் செய்து கொடுப்பார்கள். வேறு ஏதும் சந்தேகம் என்றால் பின்னூட்டம் மூலமாக கேட்கலாம்.
                                                                                                
இந்த வார குறுஞ்செய்தி:

                                                                                                

இந்த வார சினி நியூஸ்:
ளைய தளபதி விஜய் இயக்குனர் சங்கர் இயக்கப்போற 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்ல நடிக்கப்போரதில்லைன்னும், அந்த படத்திலிருந்து விலகப்போவதாகவும் தகவல், சங்கர் எதிர்பார்க்கிற விஷயங்கள்ல விஜய்க்கு கருத்துவேறுபாடு உள்ள காரணத்தினால் இந்த முடிவாம். (அப்போ வட போகபோகுதா)
                                                                                                
இந்த வார வீடியோ: 
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில ஒரு சின்ன பொண்ணு பாடுன பாட்டு, கேட்டு பாருங்க அசந்துருவிங்க.
                                                                                                
இந்த வார இணையதள முகவரி:
ம்ம புகைப்படத்த விதவிதமான இடத்துல அழகா பாக்கறதுன்ன யாருக்குதான் புடிக்காது அந்த மாதிரி நம்ம புகைப்படத்த குடுத்தா விதவிதமா மாற்றி தருகிற ஒரு தளம்தான் இந்த போட்டோ-புனியா (photofunia) தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நெனைக்கறேன். சுட்டி இங்கே (உதாரணத்துக்கு கீழே உள்ள படம்)

                                                                                                
ன்புடன்
தலதளபதி....

Tuesday, December 7, 2010

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி ( பகுதி 1 )


வேலை கொஞ்சம் அதிகமா இருந்ததால இந்த பதிவு போட்டதும் என்னால உடனே பதிவு போடமுடியல.(டேய் அப்போ மத்தவங்க எல்லாம் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு பதிவு போடறாங்களான்னு கேட்ராதிங்க)

சரி விஷயத்துக்கு வருவோம், அதாகப்பட்டது திருநெல்வேலின்னா அல்வா, மதுரைனா மல்லி, மனப்பாறைனா முறுக்கு, திருச்சின்னா மலைக்கோட்டை.(எப்புடி நம்ம இன்ட்ரோ) 

இப்போ என்னப்பத்தி, திருச்சியில அண்ணாநகர்ன்னு ஒரு பகுதியில்தான் நான் இருந்தேன். திருச்சிலருந்து புதுக்கோட்டை போற வழில ஏர்போர்ட், MIET, அதுக்கப்பறம் வர மாத்தூர் ரௌண்டான'ல ஒரு லெப்ட் கட் (அடடா!! என்ன ஒரு டமில் பற்று) அடிச்சீங்கன்னா அண்ணாநகர் மெயின் ரோடு வரும். (ஒரு ஆர்ச் இருக்கும்) அடுத்தது அயன்புத்தூர்னு ஒரு கிராமம் நெக்ஸ்ட் கும்பக்குடின்ற கிராமம் அதுக்கப்றம் ஒரு லெப்ட் கட் பண்ணுனாதான் நான் சொல்ற அண்ணா நகர் இருக்கு. கட் பண்ணாம போனா OFT அதாவது துப்பாக்கித் தொழிற்சாலைங்கர ஏரியாவுக்கு போகலாம். திருச்சி மத்தியப்பேருந்து நிலையத்துலருந்து (எந்த ஊர்லருந்து வந்தாலும் இங்கதான் எறக்கி விடுவாங்க, சென்னை கோயம்பேடு மாதிரி) அதாவது ஜங்ஷன்லருந்து 15 கி.மி தூரத்துலதான் இந்த இடம் இருக்கு. அதிகமா மத்திய தர மக்கள் அதிகமா வசிக்கற இடம் இது. நல்ல இடம் ஆனா நான் சொல்லப்போறது நான் அதிகமா திருச்சில சுத்துன இடங்கள், எனக்கு பிடித்த இடங்கள் அங்க கெடச்ச சில அனுபவங்கள் எல்லாம் சொல்லப்போறேன். (தைரியம் இருக்கறவங்க தொடரலாம்) ரெடி ஸ்டார்ட் :)

திருச்சியில கோவில்கள்னு சொல்லப்போனா மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், வயலூர் இந்த கோவில்கள் எல்லாம் பிரபலமான கோவில்கள் எனக்கு தெரிஞ்சவரைக்கும். விடுமுறை நாட்கள்ல இல்லைனா நண்பர்களோட சின்னதா ஒரு டூர் போகணும்னா முக்கொம்பு (திருச்சிலருந்து கரூர் போற வழில இருக்கு), கொள்ளிடம், கல்லணைன்னு போகலாம். அப்டியும் பொழுது போகலையா திருச்சிலருந்து தஞ்சாவூர் மெயின் ரோட்ல ஒரு சவாரி போகலாம். (அதிகமா விபத்து நடக்கற பகுதி அது, அதனால சூதனமா போனா சந்தோஷமா திரும்பி வரலாம்). 
குறிப்பிட்டு சொல்றமாதிரி திரையரங்குகள் அதிகமா இருக்குது திருச்சியில நான் அதிகமா போன மாரிஸ் காம்ப்ளெக்ஸ், அதுல அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுக்கடுத்தது காவேரி தியேட்டர் இது பலக்கரைல இருக்குது நான் அதுல பார்த்த மொத படம் துள்ளுவதோ இளமை.(தலைல துண்டு போடாத குறைதான் இந்த படம் டிக்கெட் எடுக்கறப்ப எல்லாரும்)  இன்னும் கலையரங்கம், ஊர்வசி, சோனா மீனான்னு ரொம்ப தியேட்டர் இருக்கு கெயிட்டீனு ஒரு கில்மா திட்டேர் இருக்கு மார்க்கெட் பக்கத்துல, இப்பவும் அந்தமாதி படம்தான் வருதான்னு தெரியல. இதெல்லாம் திருச்சி மக்களுக்கு அதிகமா பரிட்சயமான இடங்களா இருக்கும் கண்டிப்பா. 

மொதல்ல மலைக்கோட்டையிலருந்து ஆரம்பிக்கலாம். மாரிஸ் தியேட்டர் பக்கத்துல இருக்கற ஒரு காலேஜுக்கு (டுடோரியல் காலேஜ் ஹி ஹி) போறப்ப (சொல்லவே இல்ல) கட் அடிக்கற நேரமெல்லாம் (நான் இல்லைங்க வாத்தியார்) நண்பர்களோட சாய்ஸ் மலைக்கோட்டை உச்சி புள்ளையார் கோயில்தான். பக்தியெல்லாம் இல்ல பொழுது போறதுக்காக போவோம். அங்கருந்து திருச்சியோட முழு அழக ரசிக்கலாம். காவிரி ஆறு அதுக்கு மேல இருக்கற பாலங்கள், மேல இருந்தது பாக்கறப்ப அட்ட பூச்சி சைஸ்ல  போகுற மாதிரி டிரைன், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் கோபுரம், பச்ச பசேல்னு இருக்கற தென்னந்தோப்புகள், வயல்கள்னு பாத்துகிட்டே இருக்கலாம், மலை மேல உள்ள கடைகள்ள கொறிக்கறதுக்கு கொஞ்சம் தீனி வாங்கிட்டு போய் உக்காந்தா பொழுது போறதே தெரியாது அப்டி இருக்கும் அந்த இடம். காதலர்கள் போனா உக்கார விடமாட்டாங்க தொரத்தி விட்டுடுவாங்க அப்போ நாங்க போறப்பல்லாம், இப்ப எப்டின்னு தெரியல. திருச்சியோட அடையாளம் இந்த மலைக்கோட்டைன்னு சொல்லலாம். மலைய சுற்றி கோட்டைகள் இருக்கறதால மலைக்கோட்டைனு பேர் வந்துச்சுனு நான் சொல்லல வரலாறு சொல்லுது :). உச்சி பிள்ளையார் கோவில் போறப்ப தாயுமானவர் சந்நிதி இருக்கு ரொம்ப சக்தி வாய்ந்த இடம்னு சொல்லுவாங்க. 

தி. நகர்லருந்த்து (தில்லை நகர்) மாரிஸ் தியேட்டர் பாலம் வழியா நேரா வந்தா மலைக்கொட்டையோட வாசல் ராஜா காலத்து குகை வாசல் மாதி உங்களை வரவேற்கும். சாமி படத்துலகூட விக்ரம் பிளாஷ்பேக் சொல்றப்போ ஒருத்தர ஓட ஓட தொரத்துவாறு அது மலைக்கோட்டை தெப்பகுளம் பகுதிதான். அதுக்கு பக்கத்துல மெயின் ரோட்ல ஒரு பெரிய சர்ச் இருக்கும் அங்க போனது இல்லைனாலும் வெளிய இருந்து பாக்கறப்ப ரொம்ப கம்பீரமா அழகா இருக்கும்.

(அனுபவம் தொடரும்...)

Thursday, December 2, 2010

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி (அடுத்து வருவது)

நகர்வலம் தொடரில் அடுத்து வருவது திருச்சிராப்பள்ளி. இதில் திருச்சிராப்பள்ளியின் சிறப்புகள், அங்குள்ள சுற்றுலாத்  தளங்கள் மற்றும் பிரபலமான இடங்கள் பற்றி எனது பல அனுபவங்களில் சில அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள உள்ளேன்.

கவுண்டர்: என்னாது பகிந்துகொள்ள உள்ளியா??? அப்போ இந்த பதிவு எதுக்கு?
தளதளபதி: பாதி டைப் செஞ்சு டிராப்ட்ல இருக்குங்க எல்லாம் முடிச்சுட்டு போஸ்ட் பண்ணலாமேன்னு.... அட டிவி'ல ரெண்டு மாசம் கழிச்சி வரபோற படத்துக்கு இப்போலருந்தே ட்ரைலர் போடறதில்லையா அதுமாதிதான். அடுத்து வருவதுனுதான போட்ட்ருக்கேன்.
கவுண்டர்: ஏண்டா இப்டின்னு கேட்டா அதுக்கு ரெண்டு பக்கம் டயலாக்கா, வேணாம்டா பதிவர்கள் எல்லாம் பாவம் :(
தளதளபதி: இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள ஏன் இப்டி? மொதல்ல தண்ணிய குடிங்க.
கவுண்டர்: அய்யோ ராமா என்ன ஏன் இந்த கழிசட பசங்ககூடல்லாம் சேரவைக்கற??!!

கவுன்டவுன் ஸ்டார்ட். இஸ்டார்ட் மீஜிக்....  (சரி சரி கண்ண தொடச்சுக்குகோங்க) :)  

Tuesday, November 30, 2010

கனிமொழி - சூடான விமர்சனம்

கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகள் ஆவார். இவரது அண்ணன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது. (மொரைக்கக்கூடாது முழுசா படிங்க)

மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார்.1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய, ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். ஒரு மகன்; பெயர் ஆதித்யா.

சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.

தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
மனசாட்சி: அப்போ நீ கனிமொழி படத்தபத்தி விமர்சனம் போடல? male16 smiley, male smiley, mad smiley, angry smiley
தளதளபதி: அதுக்குத்தான் அந்த பதிவோட ஆரம்பத்துல படத்தோட படம் போட்ருக்கேன்ல.
மனசாட்சி: அப்புறம் ஏன் சூடான, ஆறிப்போனனு தலைப்பு போட்ட?
தளதளபதி: அதான் நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல நாதாரித்தனம் பண்ணுனாலும் அத............
மனசாட்சி: டாய்ய்ய்ய்...
தளதளபதி: எஸ்கேப்புடா மச்ச்சி...

Monday, November 29, 2010

கோவையில் ஒரு வெயில் காலம்!


(யாரு அங்க சிரிக்கறது? ராஸ்கோலு பிச்சுபுடுவேன் பிச்சு)

Saturday, November 27, 2010

மன்மதன் அம்பு - கமல் கவிதை

மன்மதன் அம்பு படத்திற்காக திரு. கமலஹாசனின் கவிதை.
பெண்:
கண்ணோடு கண்ணைக் கலந்தாள் என்றாள்
கலங்கமுள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கை கோர்த்தாளா
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை கழிகையில் கூடுதல் பேசினாள்  
அனுபவமிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்து பேசினாள்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
கவிதை இலக்கியம் பேசினாலாயின் 
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச்சிக்கல் எச்சரிக்கை
  
அறுவடை கொள்முதல் என்றே காமம் 
அமைவது பொதுவே நலமாகக்கொள்
கூட்டல் ஒன்றே குறி என்றானது
கழிவது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக்கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவே எனக்கொள்
காமம் எனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப் பெண்ணுறைக்கெதிறாய் ஆணுறையொன்றை
ஏற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.

ஆண்:
துணிவே அணியும் துணி என்றானபின்
அணி என்றதெதற்க்கு தனியே வருவேன்.

கலவி செய்கையில் காதில் பேசி
கணிதாய் மெலிதாய் கழுத்தைக் கவ்வும்
வெள்ளைப்பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்ததுபோல
கடும் நாற்றம் இல்லாத வாயும் வேண்டும்
காமக்க்கழிவுகள் கழுவும் வேளையில்
  
கூட நின்றவன் உதவிட வேண்டும்
சமயலின்போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் தின்தோள் வேண்டும்
மோதிக்கோபம் தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப்பின்னால் துடிக்கும் இதயம்

அது ரத்தம் பாய்ச்சிய நெகிழ்த்திய சிந்தையும்
மூளை மடிப்புகள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்
வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
புழங்கிடப் பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்

எனக்கென சுதந்திரம் கேட்க்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
இப்படி கணவன் வரவேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்
வந்தருவாள் என் வரலட்சுமி எனக்
கடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்

(தேடி எங்க போனா அந்த பொண்ணு?
கமல்: பீச்சுக்குத்தான்)

பொடி நடை போட்டே எடை மெலியவெனக் கடற்க்கரை தோறும்
காலையும் மாலையும் தொந்திக் கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்த மங்கையரோடு அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்!

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்பார்த்தேன்
வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர் திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரந்தரக் கேட்டதால் லட்சுமி உனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?

உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ?
இதுவும் உதுவும் அதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்கும் முண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்ச்சுமி நமஸ்துதே.

கவிதையை ஒலி வடிவத்தில் கேட்க:
Get this widget | Track details | eSnips Social DNA

Friday, November 26, 2010

நகர்வலம் - மடிப்பாக்கம் 600 091

சில இடங்கள மனசுல நெனச்சாலே இனிமையான நினைவுகள் வரும். அந்தமாதிரித்தான் எனக்கு மடிப்பாக்கம். அந்த பகுதில ஒரு அஞ்சு வருஷம் இருந்துருக்கேன், அந்த தைரியத்துலதான் நம்ம நகர்வலத்துல இந்த பதிவு. முந்தைய பதிவு என் சொந்த ஊர்ல இருக்கற தேரிக்குடியிருப்புங்கர ஒரு கிராமத்தப்பத்தி சொல்லிருந்தேன். இது நகர்வலத்தோட இரண்டாவது பதிவு. சரி வாங்க மெயின் மேட்டருக்கு போவோம்.

தம்பரத்துலருந்த்து 13 கி.மி, கிண்டிலருந்து 6 கி.மி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்லருந்து பதினெட்டு கி.மி தூரத்துல இருக்கற பகுதிதான் நான் சொல்ற இந்த மடிப்பாக்கம்ங்கர ஏரியா இருக்கு. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அந்த பகுதி எல்லாம் வயல்வெளியா இருந்துச்சுனு சொல்றாங்க. 1990ஆம் வருஷத்துக்கப்ரம்தான் குறிப்பிட்ட அளவு முன்னேற்றமடஞ்சுருக்கு மடிப்பாக்கம்னும் சொல்றாங்க. சென்னைல ரொம்ப வேகமா வளந்த்துகிட்டு வர ஏரியால மடிப்பாக்கமும் ஒன்னு. ஒரு பாத்திரக்கடைல வேல செய்யறதுக்காக நான் மடிப்பாக்கத்துக்கு 2004'ல, ஏன் சென்னைக்கே அப்போதான் வந்தேன். (போன புதுசல ஒரு அரை கிலோமீட்டார்குள்ளதான் லீவ் நாட்கள்ல சுத்திக்கிட்டுருப்பேன், ஏன்னா தனியா மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டருக்கு போறேன்னு சொல்லிட்டு  கடைசியா பூக்கடை பஸ்டாண்ட்ல போய் எறங்கி திருதிருன்னு முழிச்ச கதையெல்லாம் உண்டு. :) )

கிண்டிலருந்த்து செயின்ட் தாமஸ் மௌன்ட் இரயிலடி, மேடவாக்கம், தாம்பரம் போற வழில இருக்கு மடிப்பாக்கம். வேளச்செரிலருந்த்து வந்தா கைவேலி(பள்ளிகரனைக்கு முன்னாடி ஸ்டாப்), ராம் நகர், பொன்னியம்மன் கோவில் வழியா வரலாம். இங்க குறிப்பிட்டு சொல்லனும்னா கோவில்களப்பத்தி சொல்லலாம். அங்க பிரபலமான ஐயப்பன் கோவில் இருக்கு, சபரிமலைக்கு போகமுடியாதவங்க இங்க வந்துகூட பதினெட்டு படில ஏறுவாங்க. ஜனவரி ஒன்னாம் தேதி அதாவது ஆங்கில புத்தாண்டுக்கு அந்த கோவில்ல அளிக்குற அன்னதானம் ரொம்ப பிரசித்தம், அதுக்காக அந்த பகுதில ஆயிரக்கணக்கானவங்க வருவாங்க. வசதி இருக்கறவங்க இல்லாதவங்க அப்டின்னு ஏற்றத்தாழ்வு இல்லாம வருவாங்க. (அந்த கோவிலுக்கு பக்கத்துலையே இருக்கற ஒரு BPO கம்பெனில வேலை செஞ்சுருக்கேன் அதனால அடிக்கடி போவேன் நண்பர்களோட)  மடிப்பாக்கம் கூட் ரோடுலருந்து மேடவாக்கம் போற வழில ஆக்சிஸ் பேங்க்குக்கு அடுத்த இடது பக்கம் போனா அந்த கோவிலுக்கு போகலாம்.

அதிகமா இந்த பகுதிகள்ல இருக்கற மக்கள் எல்லாரும் அலுவலகம் இன்னும் மற்ற இடங்களுக்கு செல்ல டிரெயினதான் பயன்படுத்திக்கறாங்க, மடிப்பாக்கத்துலருந்து பஸ்லயோ இல்ல ஷேர் ஆட்டோலயோ செயின்ட் தாமஸ் மௌன்ட் இரயிலடிக்கு  போய் அங்கருந்து டிரெயின்ல போவாங்க. அங்கருந்து வலது பக்கம் போனா கிண்டி, சைதாபேட், தி.நகர் வழியா கடற்கரை ஸ்டேஷன் வரைக்கும் போகலாம். இடது பக்கம் போனா பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம் வழியா தாம்பரம் வரைக்கும் போகலாம். அதிக நேர இடைவெளில காஞ்சிபுரம் போற டிரென் வரும் அதுல போனா தாம்பரம் தாண்டி இருக்கற பெருங்குளத்தூர், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர்னு இன்னும் சில இடங்களுக்கும் போகலாம்.

அடுத்தது மடிப்பாக்கத்தோட மைய்யப்பகுதியான மடிப்பாக்கம் கூட் ரோடுக்கு அடுத்ததா இருக்கற பாதாள விக்னேஸ்வரர் கோவில் ரொம்ப பிரசித்தம். அந்த பகுதிகள்ல இருக்கற இலங்கைத் தமிழர்கள்தான் அந்த கோவில் கட்டறதுக்கு உதவுனதா சொல்லுவாங்க. (யாராச்சு புதுசா கார், பைக் ஏன் குட்டி பசங்க சைக்கிள் வாங்குனாகூட  அந்த கோவில்ல இருக்கற புள்ளையாருக்கு பூஜை போட்டு நாலு எலும்பிச்சம்பழத்த நசுக்காம போகவே மாட்டங்க:) ) இந்த பகுதிகள்ல இலங்கைத் தமிழர்கள் மற்ற பகுதிகளைவிட அதிகமா இருக்கறத நீங்க பாக்கலாம். (அங்க எனக்கும் சில இலங்கைத் தமிழ் நண்பர்கள் இருந்தாங்க. ஒரு இலங்கைத் தமிழர் போட்டோ ஸ்டுடியோல பகுதி நேர டிசைனிங் வேலை செய்யறப்ப கெடச்சவங்க அவங்க எல்லாம்).

மேல சொன்னமாதிரி மடிப்பாக்கத்தோட மைய்யப்பகுதி மடிப்பாக்கம் கூட் ரோடு (Junction), ரொம்ப பரபரப்பான ஏரியா கூட் ரோடு. இங்க அதிகமா தனியார் வங்கிகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபம், பல்பொருள் அங்காடிகள்னு ரொம்ப இருக்கு (நான் மொதல்ல வேலை செஞ்சதும் இந்த பகுதிலதான்). இந்த பகுதில இருக்கறவங்க சினிமா பாக்கனும்னா, செயின்ட் தாமஸ் மவுண்ட்க்கு போற வழில அந்த பாதாள விக்னேஸ்வரர் கோவிலுக்கு அடுத்த இருக்கும் குமரன் தியேட்டருக்குதான் போகணும். நான் மொதல்ல பாக்கறப்ப 15/-ரூபா டிக்கெட் பால்கனி 20/-ரூபா, இப்போ 40, 60 ன்னு ஏறிடுச்சு.அதிகபட்சமா அழகிய தமிழ் மகன் படத்துக்காக 150/- ரூபாதான் நான் கேள்விப்பட்டவரைக்கும் அதிகம் (நா சிக்கல, என் நண்பன் :) ). இந்த தியேட்டர விட்டா நங்கநல்லூர்ல இருக்கற வேலன், வெற்றிவேல் (பழைய பெயர் ரங்கா தியேட்டர்) தியேட்டருக்குத்தான் போகணும். இந்த நங்கநல்லூர் பகுதியப்பத்தி சொல்லனும்னா ரொம்ப சொல்லலாம்! அதுலயும் அங்க இருக்கற ஐயப்பன் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா கோவில் எல்லாவற்றையும்விட முப்பத்தி இரண்டு அடி ஆஞ்சநேயர் கோவில் ரொம்ப பிரபலம், அதப்பத்தி பின்னால் வரபோற பதிவுகள்ள சொல்றேன்.

நங்கநல்லூர், பழவந்தாங்கல், வானுவம்பேட்டை, ஆதம்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பள்ளிகரணை, வேளச்சேரி இதெல்லாம் மடிப்பாக்கம் சுற்றிலும் இருக்கற பகுதிகள்.

மடிப்பாக்கம் போகணும்னா M1,M11, M14, 18C, 18D, 18D, M45, 45E
51S, B51, M52A, L52K இந்த நம்பர் உள்ள பஸ்ல போகலாம்.

(ஸ்டாப் வந்துடுச்சு எல்லாம் எறங்குங்க :) ) நன்றி.



Wednesday, November 24, 2010

உருப்படுமா தமிழக காவல் துறை?

கொஞ்சநாளுக்கு முன்னாடி ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் வைகைப்புயல் வடிவேல் நடிச்ச மருதமலை படம் பாத்தேன், அதுல நம்ம எல்லாரையும் விலா வெடிக்க சிரிக்க வச்சதுல வடிவேல் நடிச்ச அந்த சிரிப்பு போலீஸ் கேரக்டர் ரொம்ப பிரபலம். அதுலயும் கடைக்காரர்கிட்ட மாமூல் வாங்கறப்ப அந்த பிச்சகாரர்கூட வர காமெடி சூப்பராருக்கும். என்னடா நம்ம ஊரு போலீச வச்சு இப்படி காமெடி பண்றாங்களேன்னு தோனுச்சு. ( திடீர்னுதான் :) ) இதுல மட்டும் இல்ல நம்ம இயக்குனர் சங்கர் அவர்கள் எடுத்த  படத்துலயும் இன்னும் சில இயக்குனர்கள் எடுத்த படத்துலயும் தப்பு பண்ற போலீஸ், தப்புக்கு உடந்தையா இருக்கற போலீஸ், லஞ்சம் வாங்கற போலீஸ்னு நடிக்க வச்சு ஹீரோவ விட்டு அடிச்சு நொறுக்குவார். நாமளும் கொய்யால என்டகூட போன வாரம் ட்ராபிக் போலீஸ் அம்பது ரூபா புடுங்கிட்டாண்டானு பொலம்பிருப்போம். (ஆனா ஏண்ணு சொல்லிருக்கமாட்டோம்) லைசென்ஸ் இல்லன்னா ஐநூறு ருபாய் அபராதம், அதுவே லஞ்சம் குடுத்தா ஐம்பது ரூபா. ஆனா கடைசில _________ பய (சென்னைல அதிகமா இப்டித்தான் கேட்ருக்கேன்) காச புடுங்கிட்டான்னு அவங்கள திட்டறது.

இந்தமாதி படத்த போலீஸ்காரங்க குடும்பத்தோட போய் பாக்கறப்ப அவங்களும் அவங்க குடும்பத்துல உள்ளவங்களும் என்ன மனநிலமைல இருப்பாங்க. சரி இப்டியெல்லாம் படத்துல எடுத்தா லஞ்சம் வாங்கறவங்க, கடமைய ஒழுங்கா செய்யாதவங்க எல்லாம் மாறிடுவாங்களா? இப்ப லஞ்சம் வாங்கறவங்க எல்லாம் வாங்கறத  நிறுத்திட்டு சட்டம் தன் கடமையைச் செய்யும்னு களத்துல எறங்கிட்டா அதுக்கப்றம் என்ன ஆகும்னு ஒரு படம் எடுத்தா மக்களோட நிலைமை என்னாகும்னு தெரிஞ்சுக்கலாம்.

சரி எப்டியோ எல்லா போலிசும் திருந்திட்டாங்க! அட!! அந்த அதிசயம் எப்டியோ நம்ம ஊர்ல நடந்துருச்சுங்க!(சும்மா கற்பனைலதான்),  அதுவும் ஆபீசுக்கு அவசரமா போறப்ப சாவகாசமா வந்து லைசென்ஸ எடுங்க, இன்சூரன்ஸ காட்டுங்க, ஏன் ஹெல்மெட் போடலன்னு கடுப்பேத்துற போக்குவரத்து காவல்துறை இனி சட்டம் தன் கடமையைச் செய்யும்னு மாறிட்டா! எப்ப்டிருக்கும்?

லைசென்ஸ் இல்லாம, இன்சூரன்ஸ்னு ரெனிவல் பண்ணாம, ஓவர் ஸ்பீட்ல போறது, ட்ரிபிள்ஸ்ல அடிக்கறது, எல்.எல்.ஆர். வச்சுகிட்டு பல வருஷம் வண்டி ஓட்டறது இப்டி பல விஷயத்துக்காக நம்ம மக்கள்கிட்ட ஐம்பது, நூறுன்னு லஞ்சம் வாங்கறதா எல்லாரும் சொல்லுவோம்.(உண்மையும் அதுதான்). சரி இப்போதான் போலீஸ் எல்லாம் திருந்திட்டாங்களே என்னாகும்?! அதுக்கப்றம் நாம எல்லாம் கேள்விப்படற நியூஸ் எப்டி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை.


  • இடப்பற்றாக்குறை காரணத்தால் தமிழகத்தில் பல அரசு கட்டிடங்களை போக்குவரத்து சட்டதிட்டங்களை மீறியவர்களின் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தப்போவதாக தமிழக அரசு அறிவிப்பு.
  • குங்குமம் இந்த வாரம்.... தமிழக போலீசா கொக்கா... மார் தட்டுகிறார் மாநகர போக்குவரத்து துறை ஆய்வாளர்.
  • ஆர்.டி.ஒ அலுவலகத்தில் தள்ளு முள்ளு, ஓட்டுனர் உரிமம் வாங்க லஞ்சம் கொடுக்க முயற்ச்சித்ததாக தமிழகம் முழுவதும் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது.
  • தமிழகத்தில் அரசுக்கு அதிகமான வருமானம் ஈட்டித்தரும் தொழில்களில்  டாஸ்மாக் இரண்டாவது இடம், முதலிடத்திற்கு முன்னேறியது காவல் துறை.
  • பணம் எண்ணும் எந்திரம் ஸ்டாக் இல்லையென தமிழகத்திற்கு மத்திய அரசு கைவிரிப்பு.
  • போக்குவரத்துத்துறையில் அபராதத்தொகை மூலம் வரும் வருமானத்தை எண்ணுவதற்கு, பணம் எண்ணுவதில் நல்ல அனுபவமிக்க ஆட்கள் தேவை.
  • ஓட்டுனர் உரிமம்பெற "எட்டு" போடுவது எப்படி?? கூறுகிறார் "ஏழு"மலை.
  • நவீனமுறையில் ஓட்டுனர் பயிற்சி மையம் தொடங்க "ரிளையன்ஸ்" திட்டம் உள்ளூர் பிரமுகர்கள் கொதிப்பு.
  • தமிழகத்தின் சாலைகள் முழுவதும் வெறிச்சோடியது.

ஒருவேள இப்டி எல்லாம் நடந்தா லஞ்சம் வாங்கறப்ப திட்டறதோட அவங்க எல்லாம் திருந்துனாதான் "உருப்படுமா காவல் துறைன்னு திட்டுவோம்". (எப்டியோ தலைப்ப கடைசில கொண்டுவந்துட்டேன்)


**இந்திய சட்டப்படி வோட்டு போடறது ஒவ்வொரு குடிமகனோட கடமையாம் அதனால மறக்காம ஒட்டு போடுங்க :) பதிவு புடிச்சுருந்தா**

Sunday, November 21, 2010

நகர்வலம் - தேரிக்குடியிருப்பு

மக்கு தெரியாத ஊருங்களப்பத்தி தெரிஞ்சுக்கரதுன்னா பலபேர்க்கு மஜாதான். அதுவும் யாருக்கும் அவ்ளோ அதிகமா தெரியாத ஊரைப்பத்தி தெரிஞ்சுக்கறதுன்னா எல்லாருக்கும் தனி சந்தோஷம்தான். எனக்கு தெரிஞ்ச பழக்கப்பட்ட இடங்களைப்பற்றி எழுதலாம்னுதான் இந்த பதிவு.

நா போனமாசம் என்னோட சொந்த ஊருக்கு போயிருந்தேன் அந்த ஊர்லருந்து ஒரு 5கி.மி தூரத்துல இருக்கற சின்ன கிராமம்தான் தேரிக்குடியிருப்பு. திருச்செந்தூருலருந்து பதிமூணு கிலோமீட்டர் தூரத்துல இருக்கு அந்த கிராமம். எங்க குலதெய்வம்கூட அங்கதான் ஸ்டே பண்ணிட்டுருக்காரு :)

நல்ல அமைதியான ஊரு, அந்த ஊருக்குள்ள கருப்பசாமி, தேரிச்சாமி, கற்கோயில் அய்யனார்'னு பிரபலமான கோவில்கள் இருக்குது, அந்தந்த கோவிலுக்கு விசேஷம் வரப்போ மட்டும் ஊர் ஜகஜ்ஜோதியா இருக்கும். மத்தபடி அப்பப்ப ஈ, காக்கா எல்லாம் எட்டி பாத்துட்டு போகும். இப்போ இலவசமா டிவி பொட்டி குடுத்ததுனால அந்த ரெண்டு ஜீவனையும்கூட அடிக்கடி பாக்கமுடியறதில்ல. (இங்கமட்டும் என்ன வாழுதாம்)



அந்த ஊருக்கு பிளஸ் பாயிண்ட்டே அங்க இருக்கற தேரிக்காடுதான். நல்லா செவப்பு கலர்ல மண்ணு இருக்கும். ஒரு குட்டி பாலைவனம் மாதிரி இருக்கும் என்ன பாலைவனத்துல மரங்கள் அவ்ளோவா பாக்க முடியாது ஆனா இங்க எல்லா எடத்துலயும் பனை மரம், கொல்லாமரம்தான் (முந்திரி மரம்). யாருவேணா எப்பவேணா போய் பழங்கள பறிச்சுக்கலாம் ஆனா அதுல இருக்கற முந்திரிக்கொட்டைய அங்கேயே பிச்சு போட்டுட்டு வந்துடனும் ஏன்னா அதுக்காகத்தான் அந்த மரங்கள எல்லாம் குத்தகைக்கு எடுத்துருப்பாங்க.



அந்த ஊர்ல விசேஷம் தவிர மத்த நாட்கள்ல சின்ன பசங்களையும் பெரியவங்களையும்தான் பாக்கமுடியும் மத்தவங்க எல்லாம் தொழிலுக்காக வேற வேற ஊருங்களுக்கு போயிருப்பாங்க. எங்க ஊர் பக்கத்துல இருக்கற பசங்க பொண்ணுங்கள்ள பாதிபேர் சென்னையில அதுவும் நம்ம ரங்கநாதன் தெருவுல இருக்கற கடைகள்ல பாக்கலாம்.



இன்னொரு ஸ்பெஷல் இருக்கு இந்த ஊர்ல! தாமிரபரணி, வில்லு பட கிளைமாக்ஸ் எல்லாம் இங்க இருக்கற தேரிக்காட்டுலதான் எடுத்துருப்பாங்க. முக்கியமா டைரக்டர் ஹரி திருச்செந்தூர், தூத்துக்குடி பக்கமெல்லாம் ஷூட்டிங் எடுப்பாரு. சிங்கத்துல வர முதல் சண்டைக்காட்சிகூட தேரில எடுத்ததா சொல்றாங்க எனக்கு சரியா தெரியல.

மெஞ்ஞானபுரம், செம்பரிக்குளம், சோலை குடியிருப்பு, எள்ளுவிளை, காயாமொழி, பரமன்குறிச்சி, பூச்சிக்காடு, வள்ளிவிளை இதெல்லாம் இந்த ஊருக்கு ஒரு பத்து கிலோமீட்டருக்குள்ள இருக்கற ஊருங்க. உடன்குடி, குலசேகரன்பட்டினம், நாசரேத், இதெல்லாம் கொஞ்சம் தூரத்துல இருக்கற ஊருங்க.

இந்த ஊர்லருந்து அதாவது தேரிக்குடியிருப்புலருந்து 1.5 கிலோமீட்டர் போனா காயாமொழி வரும் அதுக்கப்றம் நேர்வழில போனா திருச்செந்தூருக்கு போகலாம். இன்னொரு வழில போனா பரமன்குறிச்சி வரும், சுத்தி இருக்கற கிராமங்களுக்கு இந்த ஊருதான் மெயின் பஜார்.  அங்கருந்து உடன்குடி, நாகர்கோயில், திருச்செந்தூர்க்குகூட போகலாம்.

திருச்செந்தூர் பக்கம் போனா மறக்காம பாக்கவேண்டிய இடங்கள்ள இந்த தேரிக்குடியிருப்பும் ஒன்னு.



பின்குறிப்பு: முன்ன பின்ன இந்தமாதிரில்லாம் எழுதுனது இல்லை அதனால எதாச்சு குறை இருந்தா சொல்லுங்க மறுபடி இந்தமாதிரி எழுதறப்ப (என்னாது திரும்பவுமா) குறைகள கம்மி பண்ணிக்கறேன் (நீ எழுதறத கம்மி பண்ணுனாலே நல்லாருக்கும்). நன்றி.

தீர்ப்பு சொல்லுங்க!



னைவருக்கும் இனிய காலை வக்கம். எல்லாரும் ஒரு  வலைப்பூ வச்சுருக்கறத பாத்துட்டு நாபாட்டுக்கு  தல தளபதின்னு ஒரு வலைபூ ஆரம்பிச்சுட்டேனே தவிர இதுல என்ன பதிவு போடறது, எதப்பத்தி போடறதுன்னு ஒண்ணுமே புரியலை. (ஆழம் தெரியாம கால.. இல்லங்க உள்ளயே விழுந்துட்டேன்).

சினிமா விமர்சனம் அப்றம் ஊருக்குள்ள நடக்கறதெல்லாம் பிட்டு பிட்டா செய்தி மாதிரி போடலாம்னா நம்ம ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், கருந்தேள் கண்ணாயிரம்னு ரொம்பபேர் இருக்காங்க, சரி அவங்க பொழப்ப கெடுக்கவேணாம்னு விட்டுட்டேன் (நோ நோ நோ சட்டத்த உங்க கையில எடுத்துக்கறது தப்பு மொதல்ல நீங்க எடுத்த கட்ட, கம்பி, கடப்பாறை எல்லாம் கீழ போடுங்க), இந்த வெளிநாடு, எரோப்பிளேனு, பாஸ்போர்ட்னு எதாச்சு பூச்சி காட்டலாம்னு பாத்தாக்கூட நம்ம KRP செந்தில் அதுல புதுசு புதுசா கதையெல்லாம் சொல்லி பூந்து விளையாடுறாரு (ம்க்கும் இல்லன்னாமட்டும்).

புரட்சி, யூனியன், செவப்பு கொடின்னு எதாச்சு சுயமா சிந்திச்சு (நம்பமாட்டிங்களே) பதிவு போடலாம்னு பாத்தா அதுக்காகவே பொறந்து வளந்தவங்க எல்லாம் வினவு தளத்துல பதிவு போட்டுட்ருக்காங்க. (உனக்கெதுக்குடா ஊர் வம்பு?! சொன்னா கேளு உன்னால அடி தாங்கமுடியாது). 

கடைசியா என்னதான் நீ சொல்லவர்றனு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது, ஆனா நீங்கதான் அதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லணும், எந்தமாதிரி பதிவு போட்டா நீங்க எல்லாம் என் சலூனுக்கு வருவீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க. சத்தியமா சொல்றேன் உங்களல்லாம்  எப்டி என் சலூனுக்கு வரவைக்கரதுன்னே தெரியல, நா என்ன வச்சுகிட்டா வஞ்ஜனை பண்றேன்?!!!! முடிய்ய்ய்ய்யல.... புரிஞ்சுக்கோங்க.
(பின்குறிப்பு: இந்த பதிவை படித்துவிட்டு உங்க ரியாக்க்ஷன் இப்டி இருந்தா நா பொறுப்பில்ல இப்பவே சொல்லிட்டேன்).

Friday, November 19, 2010

அதிக ஹிட்ஸ் பெறுவது எப்படி?




வலைப்பூக்கள் நண்பர்களுக்கெல்லாம் வணக்கம். முதல் பதிவு என்ன போடறதுன்னு யோசிச்சதுல நம்ம வலையுலக நண்பர்கள் எல்லாம் ஹிட்ஸ் எப்படி அதிகமா கெடைக்கறதுன்னு ரொம்ப யோசிச்சு வித்யாசமான தலைப்பு, பரபரப்பான பிரச்சனைக்குள்ளான தலைப்புன்னு வச்சு ரொம்ப மூளைய செலவு பண்றதா ஒரு செய்தி என் இன்பாக்ஸ்க்கு வந்துச்சு (அப்டியானு கேள்வி எல்லாம் கேக்ககூடாது) அதனால்தான் இந்த பதிவு....

அதனால மகா ஜனங்களே இனி எந்த கஷ்டமும் படாம கை வலிக்க டைப் செய்யாம உங்களுக்கு எவ்ளோ ஹிட்ஸ் வேணுமோ அவ்ளோ ஹிட்ஸ் நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு கெடைக்கற ஐடியா சொல்றதுக்குதான் இந்த பதிவு (சப்பாபா..... இப்பவே கண்ண கட்டுதே)

முழு விபரம் தெரிய இங்கே க்ளிக்கவும் நன்றி.