Monday, December 13, 2010

கூகிள் Adசென்ஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

இணையதளத்துல சம்பாதிக்கறதுக்கு ரொம்ப வழி முறைகள் இருக்கு, அதுல முக்கியமானது "விளம்பரங்கள் மூலமா சம்பாதிக்கறது". இலவசம் மற்றும் சொந்தமா இணையதளம் வச்சுருக்கறவங்க இந்த மாதிரி விளம்பரங்கள அதற்க்குன்னு இருக்கற நிருவனத்துகிட்ட வாங்கி அவங்கவங்க தளத்துல போட்டுடனும். எப்பல்லாம் அந்த விளம்பரத்துல இருக்கற சுட்டிய மத்தவங்க க்ளிக் பண்றாங்களோ அப்போல்லாம் உங்களுக்கு பணம் வரும் (ஒரு மாசம் கழிச்சு). ரொம்பபேர் நிறைய சம்பாதிக்கறாங்க.

Friday, December 10, 2010

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி ( பகுதி 2 )

சென்ற நகர்வலத்தின் கடைசி பத்தி : தி. நகர்லருந்த்து (தில்லை நகர்) மாரிஸ் தியேட்டர் பாலம் வழியா நேரா வந்தா மலைக்கொட்டையோட வாசல் ராஜா காலத்து குகை வாசல் மாதி உங்களை வரவேற்கும். சாமி படத்துலகூட விக்ரம் பிளாஷ்பேக் சொல்றப்போ ஒருத்தர ஓட ஓட தொரத்துவாறு அது மலைக்கோட்டை தெப்பகுளம் பகுதிதான். அதுக்கு பக்கத்துல மெயின் ரோட்ல ஒரு பெரிய சர்ச் இருக்கும் அங்க போனது இல்லைனாலும் வெளிய இருந்து பாக்கறப்ப ரொம்ப கம்பீரமா அழகா இருக்கும். (திரிச்சிராப்பள்ளியின் முதல் பதிவை பார்க்க விரும்புவோர்கள் இங்கே செல்லலாம்)
                                                                                                        
திருச்சிராப்பள்ளி பகுதி 2 தொடர்கிறது. 

திருச்சியில் மலைக்கோட்டைக்கு அடுத்ததாக நான் அதிகமாக போன இடம்னு சொல்லனும்னா தியேட்டர்தான். அதுல ஒண்ணுதான் இந்த மாரிஸ் தியேட்டர். நான் அதிகமா விரும்பி போறது அதுல மாரிஸ் 70mm காம்ப்ளெக்ஸ், சென்னைல இருக்கற தேவி தியேட்டர் மாதிரி இருக்கும் உள்ள. நீங்க பாத்துக்கிட்டுருக்கற படத்துல வலது பக்கமாதான் வாகனங்கள் நிறுத்துகின்ற  இடம் இருக்கும். தீபாவளி, பொங்கல் சமயத்துல படம் பார்க்க வந்தா இப்டி அமைதியா இருக்கற இடம் எங்க ஊர் தசரா விசேஷம் மாதிரி ஆகிடும். நான் இங்க அதிகமா செலவு பண்ணினது ஆளவந்தான் படத்துக்குதான். 

இந்த தியேட்டர் முன்னாடி ஒரு பாலம் இருக்கும், அதுக்கு பெயரே மாரிஸ் பாலம்னுதான் சொல்லுவாங்க. திருச்சி ஜங்ஷன்லருந்து உறையூர் மற்றும் தில்லைநகர் வழியா சத்திரம் பேருந்து நிலையத்துக்கு போகுற பஸ் எல்லாம் இந்த பாலம் வழியாதான் போகும். பாலம் ஏறி எறங்குனதும் நேரா பாத்தீங்கனா மலைக்கோட்டை வாசல் தெரியும், அதற்கடுத்து இந்த சர்ச் வழியா இடது பக்கம் நேஷனல் கல்லூரி, ஜோசப் கல்லூரி வழியா சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு போகலாம். அதுக்கு முன்னாடி வலது பக்கத்துல திரும்புனா (வாகனத்துல போகமுடியாது அது ஒன் வே, நடந்து போனா போகலாம்)  ஹோலி கிராஸ் கல்லூரி, ராஜா பார்க், ராமகிருஷ்ணா தியேட்டர், மரக்கடைன்ற பகுதிகள் எல்லாம் இருக்கும். இப்ப நான் சொன்ன ராஜா பார்க் முன்னாடி சாதாரணமா எல்லா எடத்த போல இருக்கும். இப்போ அந்த ஏரியா முழுவதும் சென்னை உயர்ந்த தெரு மாதிரி (அதாங்க ritchie street :) ) ஆகிடுச்சு. மொபைல் சிட்டின்னு ஒரு பில்டிங், அதுக்கு பக்கத்துல மொபைல் மற்றும் கணினி சம்மந்தமான பொருட்கள் எல்லாம் கிடைக்கும். சாயந்தரம் ஒரு ஆறு ஆறரை மணிக்கு மேல போனீங்கன்னா ரோடு ஓரத்துல பல நூடுல்ஸ் கடைகளாதான் இருக்கும்.
(சரி சரி வாய தொடச்சுகோங்க :) ) மாரிஸ் பாலத்துலருந்து அடுத்த வலது பக்கம் திரும்புனா இந்த பகுதிக்கெல்லாம் போகலாம். நேரா மலைக்கோட்டை வாசல் பக்கம் போய் அங்கருந்து வலது பக்கம் திரும்புனா (இந்த ரெண்டு சாலைக்கும் அதிக தூரமில்லை, வரிசையா ரெண்டு பஸ்ஸ நிக்க வச்ச எவ்ளோ தூரம் வருமோ அவ்ளோதான்) பிஷப் ஹீபர் ஹையர் செகண்டரி ஸ்கூல், சிங்காரத்தோப்பு, அடுத்ததா கெயிட்டி தியேட்டர் (திருச்சில இருந்தவங்க, இருக்கறவங்க கண்ணுமட்டும் பளிச்சுன்னு எரியுமே இப்போ :) ) அதற்கடுத்து பாஸ்போர்ட் அலுவலகம் வரும் அப்புறம் மார்கெட் தான் அந்த பகுதி முழுசா. அரிசிக்கு, எண்ணெய்க்கு, வெங்காயத்துக்கு, மற்ற மளிகை பொருட்களுக்குனு அதே பகுதியில சில சில அடி தூரத்துல கடைகள் இருக்கும். காய்கறி மார்கெட்டுக்கு காந்தி மார்கெட்தான். விடியகாலை ரெண்டு மணிலருந்து காலைல எட்டு மணி வரைக்கும் அப்டி ஒரு கூட்டம் இருக்கும் அங்க.
திருச்சியில இருக்கறப்ப எப்பவும் ஊருக்குள்ள பஸ்லதான் சுத்தறது, அப்டி சுத்தரப்ப நான் அதிகமா வேடிக்க பாக்கறது கடைகள்ள வச்சுருக்கற விளம்பர போர்டுதான். இப்போதான் எல்லாரும் ப்ளெக்ஸ் போர்டு வச்சுடறாங்க, ஆனா அந்த சமயத்துல அதிகமா பெய்ண்டிங்தான். அதுலயும் "குரு ஆர்ட்ஸ்"னு பெயர் போட்ருக்க விளம்பர போர்டு எல்லாமே அப்டியே அச்சுல வார்த்த மாதிரி தத்ரூபமா இருக்கும். திருச்சி வாசிகள் அனைவருக்கும் நல்ல பரிட்சயம் இருக்கும் அவர் ஓவியத்தோட. அவரபத்தி எதுவும் தெரியாது ஆனா அவர் வரஞ்ச ஓவியங்கள் அனைத்திற்கும் நான் ரசிகன்.

(அனுபவம் தொடரும்)

புத்தம் புதிய டிசைனில் 2011-ஆம் ஆண்டு நாள்காட்டி!

புது வருடம் வர இன்னும் சில நாட்கள்தான் இருக்கு, அதற்காக நம்ம மக்களுக்கெல்லாம் புத்தாண்டு பரிசா (இதெல்லாம் பரிசானு கேக்ககூடாது சொல்லிட்டேன்) கீழ இருக்கற காலன்டர குடுக்கலாம்னுதான் இந்த பதிவு (வேலை இல்லங்க).

புடிச்சவங்க டவுன்லோட் பண்ணி உங்க நண்பர்களுக்கு சொல்லப்போற புத்தாண்டு வாழ்த்துக்களோட இதுல ஒரு காலன்டரையும் அனுப்பி உங்க மகிழ்ச்சிய பகிர்ந்துகோங்க... நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (யாருப்பா அது? சித்திரைதான் புத்தாண்டுன்னு சொல்றது?!) கீழே உள்ள அனைத்து வடிவமும் போட்டோ-புனியா'ல எடிட் செய்ததது. இந்த பதிவில் தங்களை கவர்ந்த நாள்காட்டி எதுன்னும் பின்னூட்டத்துல சொல்லுங்க.

அன்புடன்
தலதளபதி...



Thursday, December 9, 2010

காக்டெயில் 09-Dec-2010

தெரிஞ்சது, தெரியாதது, உட்டாலங்கடி, தத்துவம், நகைச்சுவை, படிச்சதில் பிடிச்சது (யாரது அங்க? செல்லாது செல்லாதுன்னு சொல்றது), எங்க தெருவுல நடந்தது அப்டி இப்டின்னு எல்லா விஷயமும் மொத்தமா ஒரு பதிவுல போடறதுதான் (நீயுமா!!) "காக்டெயில்". சரி வாங்க கண்டினியூ பன்னலாம். (பார்ரா)


                                                                                                
ரொம்பநாள் கழிச்சு நாளைக்கு (10-12-2010) சென்னைல கிரிக்கெட் போட்டி நடக்கப்போகுது! இந்திய அணி ரன் மழை குவிக்கப்போகுதா இல்ல வானத்துலருந்து மழை கொட்டப்போகுதாணு தெரியல. ஆல் தி பெஸ்ட் இந்தியா! (நான் சொல்லி கொடுத்த மாதிரியே விளையாடுங்க கண்டிப்பா வெற்றி நமக்குதான் :) )  
                                                                                                
ம்ம நகர்வலம் தொடர்ல திருச்சிராப்பள்ளி பற்றிய தொடர்ல நான் எதிர்பாக்காத அளவுக்கு பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களை மின் அஞ்சல் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் தெரிவிச்ச வண்ணம் இருக்காங்க. அவங்க அனைவருக்கும் நன்றிகள்.
                                                                                                
ம்ம கடைக்கு புதுசா ஒரு மென்பொருள் இன்ஸ்டால் பண்ணிருக்கேன், சும்மா சொல்லகூடாது உக்காந்த எடத்துலருந்தே எல்லா கணினியையும் கவனிச்சுக்கலாம். ஆள் இல்லாதப்ப உக்காந்த எடத்துலருந்தே மட்டற்ற கணினிகளை ஆப் பண்ணிக்கலாம், ரீஸ்டார்ட் பண்ணிக்கலாம், வாடிக்கையாளரோட விபரங்கள் மற்றும் உபயோகபடுத்துன கட்டணம் எவ்ளோன்னு துல்லியமா தெரிஞ்சுக்கலாம். கண்டிப்பா கணினி மையம் வச்சுருக்கரவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் இந்த மென்பொருள். க்ளின்க் (Clinck) அந்த மென்பொருளோட பெயர். இணைய மையம் வச்சுருக்கற நண்பர்களுக்கு விருப்பட்டா சொல்லுங்க தொடர்புகொள்ளும் முகவரி சொல்றேன்....முப்பது நாட்கள் முன்னோட்டமாக முயற்சி செய்யலாம். பிறகு அதற்குரியவர்களிடம் கூறினால் இலவசமாகவே அந்த மென்பொருளை உங்கள் அலுவலகத்திற்க்கே வந்து இன்ஸ்டால் செய்து கொடுப்பார்கள். வேறு ஏதும் சந்தேகம் என்றால் பின்னூட்டம் மூலமாக கேட்கலாம்.
                                                                                                
இந்த வார குறுஞ்செய்தி:

                                                                                                

இந்த வார சினி நியூஸ்:
ளைய தளபதி விஜய் இயக்குனர் சங்கர் இயக்கப்போற 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்ல நடிக்கப்போரதில்லைன்னும், அந்த படத்திலிருந்து விலகப்போவதாகவும் தகவல், சங்கர் எதிர்பார்க்கிற விஷயங்கள்ல விஜய்க்கு கருத்துவேறுபாடு உள்ள காரணத்தினால் இந்த முடிவாம். (அப்போ வட போகபோகுதா)
                                                                                                
இந்த வார வீடியோ: 
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில ஒரு சின்ன பொண்ணு பாடுன பாட்டு, கேட்டு பாருங்க அசந்துருவிங்க.
                                                                                                
இந்த வார இணையதள முகவரி:
ம்ம புகைப்படத்த விதவிதமான இடத்துல அழகா பாக்கறதுன்ன யாருக்குதான் புடிக்காது அந்த மாதிரி நம்ம புகைப்படத்த குடுத்தா விதவிதமா மாற்றி தருகிற ஒரு தளம்தான் இந்த போட்டோ-புனியா (photofunia) தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நெனைக்கறேன். சுட்டி இங்கே (உதாரணத்துக்கு கீழே உள்ள படம்)

                                                                                                
ன்புடன்
தலதளபதி....

Tuesday, December 7, 2010

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி ( பகுதி 1 )


வேலை கொஞ்சம் அதிகமா இருந்ததால இந்த பதிவு போட்டதும் என்னால உடனே பதிவு போடமுடியல.(டேய் அப்போ மத்தவங்க எல்லாம் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு பதிவு போடறாங்களான்னு கேட்ராதிங்க)

சரி விஷயத்துக்கு வருவோம், அதாகப்பட்டது திருநெல்வேலின்னா அல்வா, மதுரைனா மல்லி, மனப்பாறைனா முறுக்கு, திருச்சின்னா மலைக்கோட்டை.(எப்புடி நம்ம இன்ட்ரோ) 

இப்போ என்னப்பத்தி, திருச்சியில அண்ணாநகர்ன்னு ஒரு பகுதியில்தான் நான் இருந்தேன். திருச்சிலருந்து புதுக்கோட்டை போற வழில ஏர்போர்ட், MIET, அதுக்கப்பறம் வர மாத்தூர் ரௌண்டான'ல ஒரு லெப்ட் கட் (அடடா!! என்ன ஒரு டமில் பற்று) அடிச்சீங்கன்னா அண்ணாநகர் மெயின் ரோடு வரும். (ஒரு ஆர்ச் இருக்கும்) அடுத்தது அயன்புத்தூர்னு ஒரு கிராமம் நெக்ஸ்ட் கும்பக்குடின்ற கிராமம் அதுக்கப்றம் ஒரு லெப்ட் கட் பண்ணுனாதான் நான் சொல்ற அண்ணா நகர் இருக்கு. கட் பண்ணாம போனா OFT அதாவது துப்பாக்கித் தொழிற்சாலைங்கர ஏரியாவுக்கு போகலாம். திருச்சி மத்தியப்பேருந்து நிலையத்துலருந்து (எந்த ஊர்லருந்து வந்தாலும் இங்கதான் எறக்கி விடுவாங்க, சென்னை கோயம்பேடு மாதிரி) அதாவது ஜங்ஷன்லருந்து 15 கி.மி தூரத்துலதான் இந்த இடம் இருக்கு. அதிகமா மத்திய தர மக்கள் அதிகமா வசிக்கற இடம் இது. நல்ல இடம் ஆனா நான் சொல்லப்போறது நான் அதிகமா திருச்சில சுத்துன இடங்கள், எனக்கு பிடித்த இடங்கள் அங்க கெடச்ச சில அனுபவங்கள் எல்லாம் சொல்லப்போறேன். (தைரியம் இருக்கறவங்க தொடரலாம்) ரெடி ஸ்டார்ட் :)

திருச்சியில கோவில்கள்னு சொல்லப்போனா மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், வயலூர் இந்த கோவில்கள் எல்லாம் பிரபலமான கோவில்கள் எனக்கு தெரிஞ்சவரைக்கும். விடுமுறை நாட்கள்ல இல்லைனா நண்பர்களோட சின்னதா ஒரு டூர் போகணும்னா முக்கொம்பு (திருச்சிலருந்து கரூர் போற வழில இருக்கு), கொள்ளிடம், கல்லணைன்னு போகலாம். அப்டியும் பொழுது போகலையா திருச்சிலருந்து தஞ்சாவூர் மெயின் ரோட்ல ஒரு சவாரி போகலாம். (அதிகமா விபத்து நடக்கற பகுதி அது, அதனால சூதனமா போனா சந்தோஷமா திரும்பி வரலாம்). 
குறிப்பிட்டு சொல்றமாதிரி திரையரங்குகள் அதிகமா இருக்குது திருச்சியில நான் அதிகமா போன மாரிஸ் காம்ப்ளெக்ஸ், அதுல அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுக்கடுத்தது காவேரி தியேட்டர் இது பலக்கரைல இருக்குது நான் அதுல பார்த்த மொத படம் துள்ளுவதோ இளமை.(தலைல துண்டு போடாத குறைதான் இந்த படம் டிக்கெட் எடுக்கறப்ப எல்லாரும்)  இன்னும் கலையரங்கம், ஊர்வசி, சோனா மீனான்னு ரொம்ப தியேட்டர் இருக்கு கெயிட்டீனு ஒரு கில்மா திட்டேர் இருக்கு மார்க்கெட் பக்கத்துல, இப்பவும் அந்தமாதி படம்தான் வருதான்னு தெரியல. இதெல்லாம் திருச்சி மக்களுக்கு அதிகமா பரிட்சயமான இடங்களா இருக்கும் கண்டிப்பா. 

மொதல்ல மலைக்கோட்டையிலருந்து ஆரம்பிக்கலாம். மாரிஸ் தியேட்டர் பக்கத்துல இருக்கற ஒரு காலேஜுக்கு (டுடோரியல் காலேஜ் ஹி ஹி) போறப்ப (சொல்லவே இல்ல) கட் அடிக்கற நேரமெல்லாம் (நான் இல்லைங்க வாத்தியார்) நண்பர்களோட சாய்ஸ் மலைக்கோட்டை உச்சி புள்ளையார் கோயில்தான். பக்தியெல்லாம் இல்ல பொழுது போறதுக்காக போவோம். அங்கருந்து திருச்சியோட முழு அழக ரசிக்கலாம். காவிரி ஆறு அதுக்கு மேல இருக்கற பாலங்கள், மேல இருந்தது பாக்கறப்ப அட்ட பூச்சி சைஸ்ல  போகுற மாதிரி டிரைன், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் கோபுரம், பச்ச பசேல்னு இருக்கற தென்னந்தோப்புகள், வயல்கள்னு பாத்துகிட்டே இருக்கலாம், மலை மேல உள்ள கடைகள்ள கொறிக்கறதுக்கு கொஞ்சம் தீனி வாங்கிட்டு போய் உக்காந்தா பொழுது போறதே தெரியாது அப்டி இருக்கும் அந்த இடம். காதலர்கள் போனா உக்கார விடமாட்டாங்க தொரத்தி விட்டுடுவாங்க அப்போ நாங்க போறப்பல்லாம், இப்ப எப்டின்னு தெரியல. திருச்சியோட அடையாளம் இந்த மலைக்கோட்டைன்னு சொல்லலாம். மலைய சுற்றி கோட்டைகள் இருக்கறதால மலைக்கோட்டைனு பேர் வந்துச்சுனு நான் சொல்லல வரலாறு சொல்லுது :). உச்சி பிள்ளையார் கோவில் போறப்ப தாயுமானவர் சந்நிதி இருக்கு ரொம்ப சக்தி வாய்ந்த இடம்னு சொல்லுவாங்க. 

தி. நகர்லருந்த்து (தில்லை நகர்) மாரிஸ் தியேட்டர் பாலம் வழியா நேரா வந்தா மலைக்கொட்டையோட வாசல் ராஜா காலத்து குகை வாசல் மாதி உங்களை வரவேற்கும். சாமி படத்துலகூட விக்ரம் பிளாஷ்பேக் சொல்றப்போ ஒருத்தர ஓட ஓட தொரத்துவாறு அது மலைக்கோட்டை தெப்பகுளம் பகுதிதான். அதுக்கு பக்கத்துல மெயின் ரோட்ல ஒரு பெரிய சர்ச் இருக்கும் அங்க போனது இல்லைனாலும் வெளிய இருந்து பாக்கறப்ப ரொம்ப கம்பீரமா அழகா இருக்கும்.

(அனுபவம் தொடரும்...)

Thursday, December 2, 2010

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி (அடுத்து வருவது)

நகர்வலம் தொடரில் அடுத்து வருவது திருச்சிராப்பள்ளி. இதில் திருச்சிராப்பள்ளியின் சிறப்புகள், அங்குள்ள சுற்றுலாத்  தளங்கள் மற்றும் பிரபலமான இடங்கள் பற்றி எனது பல அனுபவங்களில் சில அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள உள்ளேன்.

கவுண்டர்: என்னாது பகிந்துகொள்ள உள்ளியா??? அப்போ இந்த பதிவு எதுக்கு?
தளதளபதி: பாதி டைப் செஞ்சு டிராப்ட்ல இருக்குங்க எல்லாம் முடிச்சுட்டு போஸ்ட் பண்ணலாமேன்னு.... அட டிவி'ல ரெண்டு மாசம் கழிச்சி வரபோற படத்துக்கு இப்போலருந்தே ட்ரைலர் போடறதில்லையா அதுமாதிதான். அடுத்து வருவதுனுதான போட்ட்ருக்கேன்.
கவுண்டர்: ஏண்டா இப்டின்னு கேட்டா அதுக்கு ரெண்டு பக்கம் டயலாக்கா, வேணாம்டா பதிவர்கள் எல்லாம் பாவம் :(
தளதளபதி: இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள ஏன் இப்டி? மொதல்ல தண்ணிய குடிங்க.
கவுண்டர்: அய்யோ ராமா என்ன ஏன் இந்த கழிசட பசங்ககூடல்லாம் சேரவைக்கற??!!

கவுன்டவுன் ஸ்டார்ட். இஸ்டார்ட் மீஜிக்....  (சரி சரி கண்ண தொடச்சுக்குகோங்க) :)  

Tuesday, November 30, 2010

கனிமொழி - சூடான விமர்சனம்

கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகள் ஆவார். இவரது அண்ணன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது. (மொரைக்கக்கூடாது முழுசா படிங்க)

மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார்.1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய, ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். ஒரு மகன்; பெயர் ஆதித்யா.

சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.

தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
மனசாட்சி: அப்போ நீ கனிமொழி படத்தபத்தி விமர்சனம் போடல? male16 smiley, male smiley, mad smiley, angry smiley
தளதளபதி: அதுக்குத்தான் அந்த பதிவோட ஆரம்பத்துல படத்தோட படம் போட்ருக்கேன்ல.
மனசாட்சி: அப்புறம் ஏன் சூடான, ஆறிப்போனனு தலைப்பு போட்ட?
தளதளபதி: அதான் நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல நாதாரித்தனம் பண்ணுனாலும் அத............
மனசாட்சி: டாய்ய்ய்ய்...
தளதளபதி: எஸ்கேப்புடா மச்ச்சி...